ஈராசிரியர் பள்ளியில் பணி மாறுதல் வாங்கியவர்களுக்கு பணி விடுவிப்பு எப்போது ???

Name P.SIVAKUMAR( ஆசிரியர் வாய்.ஸ்)
Petition No 2015/843312/EP Petition Date 07/09/2015
Address ,,,Vallimathuram,Titagudi,Cuddalore-,Tamilnadu
   Grievance வணக்கம்.அரசு
தொடக்கப்பள்ளிமற்றும் நடுநிலைப்பள்ளிகளில்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நான்குகட்டங்களாக இடமாறுதல் கலந்தாய்வுநடைப்பெற்றது.வட மாவட்டங்களில்பணியாற்றும் தென்மாவட்ட ஆசிரியர்கள்மாவட்ட இடமாறுதல் கலந்தாய்விற்குவிண்ணப்பித்து இடமாறுதலும்பெற்றனர்.அவர்களில் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலைஆசிரியர்கள் பணிவிடுவிப்பு செய்யப்பட்டுஅவர்கள் விருப்ப மாறுதல் பெற்றபள்ளிகளில் பணியேற்றுக்கொண்டனர்.
ஆனால் மாவட்ட மாறுதல் ஆணை பெற்றஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும்இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவிடுவிப்பு ஆணை வழங்கப்பட்டாததால்இடமாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியேற்கமுடியாத சூழல் நிலவுகிறது.சொந்தமாவட்டத்திலிருந்து வெகு தூரமாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்இதனால் பெரும் சிரமத்திற்குஉள்ளாகியுள்ளனர்.எனவே மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் இவ்விசயத்தில்உடனடியாக தலையிட்டு மாவட்ட மாறுதல்பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலைஆசிரியர்களை அவர்கள் விருப்ப மாறுதல்பெற்ற பள்ளிகளில் பணியேற்கும் வகையில்உடனடியாக பணி விடுவிப்பு ஆணைவழங்குமாறு சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டுமாய்பணிவுடன் மாவட்ட மாறுதல் பெற்றஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர்சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Grievance Category SERVICE MATTERS - PROMOTION, TRANSFERS,NON-PAYME Petition Status Rejected
Concerned Officer SCHOOL EDUCATION - ELE.EDN DIR

Reply அரசு விதிகளின்படி ஈராசிரியர்பள்ளிகளின் பதிலி ஆசிரியர் பணி ஏற்கும்வரை பணிவிடுப்பு செய்ய இயலாது எனதெரிவிக்கலாகிறது. இவ்வலுவலகந.க.எண்.185/அ6/2015 நாள்.11.09.2015

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...