1,863 பதவிகளுக்கு டிச.,27ல் தேர்வு!

அரசு துறைகளில், குரூப்-2 ஏ பிரிவில், 1,863 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில், பட்டப்படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம்.


இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 ஏ பிரிவில், நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளில், 10க்கும் மேற்பட்ட துறைகளில், 1,863 காலியிடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு நடக்கும். தேர்வு எழுத விரும்புவோர், ஆன்லைன் மூலம் மட்டுமே, நவ., 11க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை, நவ., 13க்குள் செலுத்தலாம். தமிழகம் முழுவதும், 116 மையங்களில் தேர்வு நடக்கும். பட்டப்படிப்பு முடித்த அனைவரும் தேர்வில் பங்கேற்கலாம்.

தேர்வுக்கான தகுதி விவரங்களை, http://www.tnpscexams.net/ மற்றும் http://www.tnpscexams.in/ என்ற இணையதள இணைப்புகளில் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...