பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் காலாண்டு தேர்வு தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகரித்துள்ளது.
அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க,
இக்கல்வியாண்டு துவக்கம் முதல் கல்வித்துறை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில், முதல் திருப்புதல் தேர்வில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், சுமாராக படிக்கும் மாணவர்களை கண்டறிந்து, மாலைநேர சிறப்பு வகுப்புகள் நடத்தி, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதன் விளைவாக, காலாண்டு தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், மதுரை, மேலுார் கல்வி மாவட்டங்கள் அரசு பள்ளி தலைமையாசிரியர் பங்கேற்ற சிறப்பு ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் காலாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டதில், கடந்த காலாண்டு தேர்வை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது, என்றார்