கடந்த 27/10/2015 அன்று SSTA-வின் மாநில நிர்வாகிகள் கல்வித்துறை,நிதித்துறை உயரதிகாரிகளை சந்தித்த விபரங்கள்..
முதலில் SSTA சார்பாக முதன்மை நிதித்துறைச் செயலர்
அவர்களையும் இணை மற்றும் துணைச் செயலர்களையும் சந்தித்து இடைநிலை(2009 மற்றும் தகுதித்தேர்வில் வந்தவர்கள்) ஆசிரியர்களுக்கு மாநில அரசிற்கு இணையான ஊதிய முரண்பாடு குறித்தும் அரசிற்கு ஏற்படும் செலவீனம் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு செலவீனப்பட்டியலும் கொடுக்கப்பட்டது. அதற்கு அவர்கள் 7-வது ஊதியக்குழு வரும் வரை எந்த பெரிய மாற்றமும் இருக்காது என்று திட்டவட்டமாக தெளிவாக எடுத்துரைத்தனர். அதற்கு SSTA சார்பாக குறைந்தபட்ச செலவுதான் ஏற்படும் என்று அழுத்தமாக கூறப்பட்டது.
அப்படி ஒரு வாய்ப்புகளிருந்தால் நாங்கள் பரிசீலனை செய்வோம் என்று கூறினர்.
🌺அடுத்ததாக பள்ளிக்கல்வித்துறை இணை செயலர் அவர்களை சந்தித்து உயர்கல்வி தகுதிகளுக்கு பின்னேற்பு சம்மந்தமாக மீண்டும் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.
🌺அடுத்ததாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து நம் ஊதிய முரண்பாட்டினை எடுத்துரைக்கப்பட்டது.
மத்திய அரசிற்கு இணையான ஊதியம் ஒரு புறமிருக்க மாநில அரசில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திலேயே அதிக முரண்பாடு உள்ளது என்றும் குறைந்த பட்சம் 8500க்கும் மேல் வித்தியாசம் உள்ளதை தெளிவாக எடுத்துரைத்தனர்.
இதற்கு அவர்கள் தரப்பிலும் 7-வது ஊதிய குழுவிற்கு முன் எந்த பெரிய மாற்றமும் இருக்காது என்று தெரிவித்தனர்.
SSTA சார்பாக குறைந்தபட்சம் இடைநிலை(2009க்கு பிறகு) ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினையாவது களைந்து தருமாறு வலியுறுத்தப்பட்டது.
மேலும் உயர்கல்வி தகுதிகளுக்கு பின்னேற்பு சம்மந்தமாக மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
ஈராசிரியர் பள்ளியில் மாவட்ட பணிமாறுதல் பெற்றவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை SSTA சார்பாக. இரண்டாவது முறையாக வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பதில் அளித்த இயக்குனர் அவர்கள் உடனே அனைவரையும் விடுவிக்க முடியாது என்றும் விடுவித்தால் ஓராசிரியர் பள்ளி என்ற பெயரும் மாணவர்களின் கல்வித்தரமும் பாதிக்கும் என்று கூறினார்.
SSTA சார்பில் உபரி ஆசிரியர்களை பயன்படுத்தி அவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
அதற்கு அவர்கள் அவ்வாறு இல்லாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்யலாம் என்று கல்வித்துறை ஆலோசித்து முடிவெடுக்கும் எனக் கூறினார்.
விரைவில் SSTA ஒரே கோரிக்கையை(இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம்) வலியுறுத்தி போராட்டத்தை துவக்கும். பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஒரே அணியில் திரள்வோம்! ஒரே கோரிக்கைக்காக!
இணைவீர்! உங்கள் ஆதரவுடன் SSTAவில்...
என்றும் உங்களுக்காகவே உண்மையை மட்டும் சொல்லும் உங்கள் 🌹🌹🌹SSTA🌹🌹🌹