CRC ஈடுசெய் விடுப்பு மதுரை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் வழங்க வேண்டும்,தீபாவளிக்கு முன் தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட தொடக்க கல்வி அலுவர் சந்திப்பு!!!

🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺
SSTA -வின் மாநில மற்றும் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று்  (29/10/2015) மதுரை மாவட்ட
 தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து இனிதே அறிமுகம் செய்துகொண்டனர்.


தொடக்கக் கல்வித்துறையில் மாவட்ட அளவிலான வேலை நாட்களை பள்ளிக் கல்வித்துறைப்போல மாநில முழுவதும் ஒரே வேலை நாட்களாக மாற்றியது SSTA.

இதேப்போல் CRC பயிற்சிக்கான சிறப்பு ஈடுசெய் விடுப்பினை  பள்ளிக்கல்வித்துறையைப் போல CRC பயிற்சிக்கு  ஈடுசெய்யும் விடுமுறை வழங்க வேண்டும் என எடுத்துரைத்ததோடு அதற்கான G.O வையும்(G.O no:62 நாள்:13/3/2015) தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களால் வெளியிடப்பட்ட 2015-2016 ஆண்டிற்கான வேலைநாட்கள் பட்டியலையும் இணைத்து வலியுறுத்தப்பட்டது.
மேலும் இந்த விடுப்பு  ஒரு சில ஒன்றியங்களில் மறுக்கப்படுவதாகவும் ஒவ்வொரு  ஆண்டும் இதற்கான அரசாணை வெளிவர வேண்டும் என்றும் இன்னும் சரியான தெளிவான அரசாணை வரவில்லை என்றும் அதிகாரிகளால் மறுக்கப்படுகிறது.

மதுரை மாவட்டத்திலும் இதேப்போல் மறுக்கப்பட்டதை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களிடம்  எடுத்துரைத்தனர்.
அதோடு அரசாணை மற்றும் வேலைநாட்கள் பட்டியலும் இணைத்து விடுப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை கனிவோடு பரிசீலித்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் துரிதமாக பிரச்சினைகளை களைந்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

👍🏼அடுத்ததாக தீபாவளிக்கு  முந்தைய தினம் பொதுவிடுமுறை வழங்க வேண்டும் என்றும்  வெளியூர் சென்று வரும் ஆசிரியர்களுக்கு  மிகுந்த சிரமத்தை  ஏற்படுத்தும் என்பதை கருதி கடந்தாண்டு விடுமுறை விட்டதைப் போன்று இவ்வாண்டும் விடுமுறை வழங்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

அதற்கும் முடிந்தவரை முயற்சி செய்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.

 👍🏼அடுத்ததாக கள்ளிக்குடி ஒன்றியத்தில் பணிபுரியும் 16 ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிந்தும் அதற்கான ஆணை வழங்காமல் உள்ளது என்றும் நடைமுறை சிக்கல்களை தீர்த்து ஆணை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களின் ஒவ்வொரு கோரிக்கையும் தனி கவனத்தோடு கொண்டு செல்லும் ஒரே இயக்கம் உங்கள் SSTA மட்டுமே!
என்றும் உங்கள் ஆதரவோடு செயல்படும் ஒரே இயக்கம்...🌹SSTA🌹j

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...