7243 பேரை தேர்வு செய்யும் அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கு!

ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ் பணிக்கு, 7243 பேரை தேர்வு செய்யும் அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கை, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை ஒத்தி வைத்தது.



ராமநாதபுரம் ராஜேஸ்வரி மனுஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில், 2013 ல் ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ் பணியில் நியமிக்கப்பட்டேன். ஒப்பந்த அடிப்படையில் 7243 நர்ஸ்களை தேர்வு செய்யும் அறிவிப்பை 2015 ஏப்.,19 ல் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் வெளியிட்டது. தேர்வில் பங்கேற்றேன். நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் மதிப்பெண் பெற்றேன். சிலருக்கு மட்டும் பணி நியமன உத்தரவு வழங்கியுள்ளனர். மற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, பணி நியமனம் வழங்கப்படும் என்றனர்.

ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர், அவுட்சோர்சிங் முறையில் பணிபுரிகின்றீர்கள். பணி நீட்டிப்பு வழங்க முடியாது, என்றார். பணிவரன் முறைப்படுத்துவதில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் நர்ஸ்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. நர்ஸ் பணி தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். என்னை பணி நீக்கம் செய்ய தடை விதித்து, பணியை வரன்முறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ராஜேஸ்வரி மனு செய்திருந்தார். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...