மாணவர்களுக்கு பால் ஐந்து நாட்களாக அதிகரிப்பு!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இனி, ஐந்து நாட்களுக்கு பால் வழங்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.


மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என, மூன்று நாட்கள் பால் வழங்கப் படுகின்றன. வாசனை பால் வெறும் பாலாக வழங்குவதை விட, வாசனை பால் வழங்கும்படி, மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதனால், ஷிர பாக்யா திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் பால், வாரத்தில், ஐந்து நாட்கள் வழங்குவது என்றும், வாசனை பாலாக - ப்ளாவர்ட் மில்க் வழங்கும்படியும் முதல்வர் சித்தராமையா, கல்வி துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, ஷிர பாக்யா திட்டத்தின் கீழ், மதிய உணவு திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், முதலாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பால் வழங்கப்படுகிறது. 18 கிராம் பால் பவுடரை, 150 கிராம் சூடான பாலாக மாற்றி, மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இஸ்கானின், அக் ஷய பாத்யா பவுண்டேஷன் மட்டுமே, வாசனை பாலை வினியோகித்து வருகிறது.

மதிய உணவு திட்ட இயக்குனர் பெல்லா ரெட்டி கூறுகையில், வாசனை பால் வழங்கும்படி வாய் மொழியாக கூறப்பட்டதே தவிர, அதிகாரப்பூர்வமான உத்தரவு இன்னும் வரவில்லை, என்றார். நல்லது தான்பெங்களூரு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன டயட்டிஷன் ரூபா தீப்தி கூறுகையில், சாதாரண பால் குடிப்பதற்கு பதில், வாசனை பாலை குடிக்க மாணவர்கள் விரும்புவது இயற்கை. இதில், கலப்படம் செய்வதற்கு வாய்ப்பு குறைவு. எடை குறைந்த குழந்தைகளுக்கு வாசனை பால் வழங்குவது நல்லது, என்றார்.

கே.எம்.எப்., தலைவர் நாகராஜ் கூறியதாவது:

7.5 லட்சம் லிட்டர்வாரந்தோறும், ஐந்து நாட்கள் பால் வாங்கும் தகுதி உள்ளது. வாசனை பாலை, 30 முதல், 90 நாட்கள் வரை கெடாமலிருக்கும் வகையில், பக்குவப்படுத்தி, பிளெக்ஸி பேக் குகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறோம். குழந்தைகளுக்கும் வாசனை பால் வழங்கும் சக்தியும், திறமையும் உள்ளது. தற்போது நாள் தோறும், 7.5 லட்சம் லிட்டர் பாலை வினியோகித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...