அரசுப் பள்ளியில் வாட்ச்மேனின் தவறுதலால், வகுப்பறைக்குள் வைத்து பூட்டப்பட்ட மாணவியர், நான்கு பேர், 30 நிமிடங்களுக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திருச்சி, மலைக்கோட்டை பகுதியில் உள்ள, டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், மேல்நிலை வகுப்பு மாணவியருக்கு, மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. நேற்று மாலை நடந்த சிறப்பு வகுப்பின் போது, ஒரு வகுப்பறை மாடியில், பிளஸ் 1 மாணவியர் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். இதை அறியாத, பள்ளி வாட்ச்மேன், வகுப்பறையை வெளியே பூட்டி விட்டு, சென்று விட்டார். மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவியர், மாலை, 6:00 மணிக்கு கீழே வந்த போது, வகுப்பறை பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்; இதனால், மாடியில் ஏறி கூச்சலிட்டனர்.
இதைக் கண்ட, அக்கம் பக்கத்தினர் மற்றும் கோட்டை போலீசார், இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, வாட்ச்மேனை தொடர்பு கொண்ட தலைமை ஆசிரியர், மாணவியரை விடுவிக்கச் செய்தார். இதனால், 30 நிமிடங்கள் பூட்டிய அறையின் மாடியில் தவித்த மாணவியர் நால்வரும், பத்திரமாக மீட்கப்பட்டனர்.