தொடர் மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவ. 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் சிறிய அளவில் மழை பதிவாகி வந்தது.
இந்த நிலையில், வங்கக் கடலில் புதிதாக உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுவையிலும் திங்கள்கிழமை பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இதேபோல், புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.