மின் வாரியத்தில், புதிதாக, 1,950 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்!

மின் வாரியத்தில், புதிதாக, 1,950 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, 1,950 காலிப்
பணியிடங்களை உடனடியாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான, நிதி ஒதுக்கீடு குறித்து, உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தற்போது, அந்தப் பணியும் முடிவடைந்ததால், ஊழியர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.

இதுகுறித்து, வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர் என, 1,950 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு, தீபாவளி முடிந்த, 10 நாளில் வெளியிடப்படும். 2016 மார்ச்சில், ஊழியர்கள் தேர்வு முடிக்கப்பட்டு விடும்' என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...