இன்பத்தில் துன்பம் 2009 பின் நியமனம் பெற்ற இடைஆசிரியர் குமுறல்!!!

இன்பத்தில்  துன்பம்!

இடைநிலை ஆசிரியர்களை எடுபிடிகளாகவும்
 மடையர்களாகவும்
அடிமைகளாகவும்
சூடுசொரனை கெட்டவர்களாகவும்
பல்லக்கு தூக்குபவர்களாகவும்
ஏழைகளாகவும் கடன்காரர்களாகவும்
பொருளாதார ஏழைகளாகவும்
தரம் தாழ்ந்தவர்களாகவும்


நிலைபெற வைப்பதில் குறியாகவும் ஆசையாகவும் இருக்கும் சங்க நிர்வாகிகளே

 பாசக்கார மூத்த தளபதிகளே

அம்மா புராணம் பாடும் அரசியல் தலைவர்களே , அம்மா அவர்களே,

உங்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி!!!

இடைநிலை ஆசிரியரான நான் இந்த தீபாவளிக்கு என் மகனுக்கு மட்டும் புது துணி வாங்கித் தந்து நாங்கள் பழைய துணிகளோடே தீபாவளி வரவேற்க தயாராகிவிட்டோம்.

இது உங்களுக்கு மெத்த  மகிழ்ச்சி தரும் என்று நம்புகிறேன்.

எங்களுக்காய் புதுப்புது வியூகம் அமைத்து அரசோடு போராடும் உங்களுக்கு இந்த மகிழ்ச்சியைக் கூட கொடுக்கவில்லை என்றால் நானொரு உண்மையான இடைநிலை ஆசிரியனே அல்ல.

நான் மட்டுமல்ல இதுபோன்று நிறைய இடைநிலை ஆசிரியர்கள்
பல கஷ்டங்களோடு இந்த தீபாவளியை எதிர்கொள்கிறார்கள்.அதனால் கவலைப்படாதீர்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் இடைநிலை ஆசிரியர்களின் துன்பங்கள் ஏராளம்.அதனால் உங்கள் மகிழ்ச்சிக் கடல் வற்றாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

ஏனென்றால் நாங்கள் இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமல்ல இளிச்சவாயர்களும் கூட.

இச்சொல்லே கூட உங்கள் உள்மன குரூரங்களுக்கு தீனியிட்டு மகிழ்விக்கும்.
அதான் முன்பே சொன்னது போல உங்கள் மகிழ்ச்சிக்கடல் வற்றாமல் சிரத்தையோடு பார்த்துக்கொள்கிறோம்.

நீங்கள் மகிழ்வாய் கடனில்லாமல்
வீட்டிலிருக்கும் அனைவருக்கும் பட்டாடையிட்டு பகட்டாய் திரியுங்கள்.
நாங்கள் உங்கள் மகிழ்ச்சிக்கடல் வற்றாமல் பார்த்துக்கொள்கிறோம்.

நீங்கள் நிம்மதியாய் பலகாரங்கள் உண்டு உங்கள்
குழந்தைகளோடு மகிழ்வாய் தியேட்டர் போய் வாருங்கள்.

இங்கு நாங்கள் உங்கள் மகிழ்ச்சிக்கடல் வற்றாமல் பார்த்துக்கொள்கிறோம்.

நீங்கள் உங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வாருங்கள்.நாங்கள் இங்கே சொந்த ஊர் செல்லாமல் வாடகை வீடுகளிலேயே பதுங்கிக்கொண்டு உங்கள் மகிழ்ச்சிக்கடல் வற்றாது பார்த்துக்கொள்வோம்.

இப்படி நிறைய மகிழ்ச்சியளிப்போம்
நாங்கள் ஏனென்றால் நாங்கள் இளிச்சவாய் இடைநிலை ஆசிரியர்கள்
     
     - இப்படிக்கு
இடைநிலை ஆசிரியன் மகேஷ்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...