ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது! 25 லட்சம் பேர் பயனடைவர்....

முன்னாள் ராணுவத்தினருக்கான "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. அதுதொடர்பான அறிவிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் 25 லட்சம் முன்னாள் ராணுவத்தினரும், அவர்களது குடும்பத்தினரும் பயன்பெறுவர்.


ராணுவத்தினரின் ஓய்வூதிய விகிதத்தில் நிலவும் முரண்பாடுகளைக் களையும் வகையில் அவர்களது நீண்டகால கோரிக்கையான ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

அதன்படி, கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதற்கும், அறிவிப்பில் இடம்பெற்றிருந்த சில அம்சங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முன்னாள் ராணுவத்தினர் பலர் போராட்டத்தில் இறங்கினர்.

தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அவர்கள் உண்ணாவிரதம் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்ட அமலாக்கத்துக்கான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

2013-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்படும் சராசரி ஓய்வூதியத் தொகை அடிப்படையில் முன்னாள் ராணுவத்தினர் அனைவருக்கும் ஒரே சீராக ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியத் தொகை 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதியம் மறு நிர்ணயம் செய்யப்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தாங்கள் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாமலேயே ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது என்று முன்னாள் ராணுவத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஓய்வூதியத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும், 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முன்தேதியிட்டு ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் என்பதும் முன்னாள் ராணுவத்தினரின் பிரதானக் கோரிக்கைகளாக உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...