வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் 86.66 லட்சம்!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உள்ளது. இதில், 44 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர் பெண்களாவர்.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகாத்திருப்போரின் விவரங்களை வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையானது தமிழகஅரசின் இணையதளத்தில்
வெளியிட்டுள்ளது.


அதன்படி, 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 44 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர் பெண்கள்.இன வாரியாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 18 லட்சத்து 81 ஆயிரத்து 433 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 22 லட்சத்து 26 ஆயிரத்து 826 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர் 36 லட்சத்து 65 ஆயிரத்து 77 பேரும் அடங்குவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...