வருமான வரி தாக்கல் விவரங்கள் ரகசிய எண்கள், குறிப்புகளை யாரிடமும பகிர்ந்து கொள்ளாதீர்கள்!

வருமான வரி தாக்கல் விவரங்கள் மற்றும் அது தொடர்பான ரகசிய எண்கள், குறிப்புகளை மொபைல் போன் அல்லது இ - மெயில் வாயிலாக மோசடியாளர்கள் கேட்க வாய்ப்பு உள்ளது; அந்த தகவல்களை, யார்
கேட்டாலும் தெரிவிக்க வேண்டாம்' என, வரி செலுத்துவோரை, வருமான வரித்துறை உஷார்படுத்தியுள்ளது.


கடந்த ஓரிரு ஆண்டுகளாக, இணையம் வாயிலாகவே, பெரும்பாலான வருமான வரி தாக்கல் மற்றும் வரி செலுத்துவது நடைபெறுகிறது.இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி நபர்கள், வருமான வரி செலுத்துவோரின் தகவல்களை திருடி, முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக, வருமான வரித்துறை சந்தேகம் கொண்டுஉள்ளது. அதையடுத்தே, எச்சரிக்கை அறிவிப்பை, அந்த துறை வெளியிட்டுள்ளது. அதில், 'வருமானவரித்துறை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடையும் நிலையில்உள்ளதால், வரி செலுத்துவோர், தங்களின் சொத்து, வங்கி எண், கடன் அட்டையின் ரகசிய குறியீடு எண்கள் போன்றவற்றை யார் கேட்டாலும் தெரிவிக்க வேண்டாம்' என, கேட்டுக் கொண்டுஉள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...