கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால், மனமுடைந்த கல்லுாரி மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர், வரதராஜபெருமாள் கோவில் நகர் முதல் தெருவைச்
சேர்ந்தவர் செல்வராஜ்; லாரி ஓட்டுனர். அவரது மகள் மகேஸ்வரி, 19; பாலவாக்கத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லுாரியில் பி.இ., நான்காம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம், வீட்டில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்வி கட்டணம், குறித்த நேரத்தில் செலுத்த முடியவில்லை என்ற விரக்தியில், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் கூறினர். இதுகுறித்து, சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.