விமான சேவை துவங்க இன்னும் 2 நாட்கள் ஆகும் !

சென்னை விமான நிலையத்தில் இருந்து விமான சேவை துவங்க இன்னும் 2 நாட்கள் ஆகும் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது. விமான ஓடு
தளத்திலும் ஒரு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. தொடர்ந்து பெய்த மழையால், ஓடு பாதையில் தேங்கிய நீரை வெளியேற்ற முடியாமல் போனது. இதனால், சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 2ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.



இதனையடுத்து அரக்கோணம் ஐ.என்.எஸ்., ராஜாளி விமானப்படை தளம் தற்காலிக பயணிகள் விமான நிலையமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் மழை ஓய்ந்ததால், இன்று(டிச.,5) சென்னை விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு, விமான சேவை மீண்டும் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இன்று விமான சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா, சென்னை விமான நிலையத்தில் இருந்து விமான சேவை துவங்க 2 நாட்களாகும். தற்போதுள்ள சூழ்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்க முடியாது. மின் விநியோகம் சீரடைந்த பிறகே மீண்டும் விமான போக்குவரத்து துவங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...