சென்னைக்கு வர திணறிய மீட்பு கப்பல்: மேலும் இரண்டு கப்பல்கள் வருகின்றன..

மீட்பு பணியில் ஈடுபட வந்த கடற்படை கப்பல், மோசமான வானிலை காரணமாக, பல மணி நேர போராட்டத்துக்குப் பின், சென்னைக்குள் நுழைந்தது. இதுதவிர, மேலும், இரண்டு கடலோர காவல் படை கப்பல்கள், இன்று சென்னை வருகின்றன.


கடற்படையின் ஐ.என்.எஸ்., ஐராவத் கப்பல், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து, நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டது. அது, சென்னைக்கு, நேற்று காலை வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வங்கக் கடலின் மோசமான வானிலை காரணமாக அதன் வேகம் தடைபட்டது. அதனால், பிற்பகல், 3:00 மணிக்கு வரும் என அறிவிப்பு வெளியானது; அப்போதும் சென்னயை நெருங்க முடியவில்லை.

அதன்பின், இரவு, 7:30 மணிக்கு சென்னை கடற்படை தளத்துக்குள் நுழைந்தது. அதில், ஐந்து நவீன படகுகள், 20 நீச்சல் வீரர்கள் வந்துள்ளனர். இதுதவிர, மும்பை மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து கூடுதல் படகுகள் மற்றும் வீரர்களுடன், இரண்டு கப்பல்கள், இன்று சென்னை வருவதாக, கடலோர காவல்படை அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...