பலத்த மழை காரணமாக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு!!!

மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளதன் காரணமாக ஏற்கெனவே ஒத்திவைத்து மறுதேதி அறிவித்த தேர்வுகளை சென்னைப் பல்கலைக்கழகம் மறுபடியும்ஒத்திவைத்துள்ளது.சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி முதல் தொடர் மழை பெய்தது.



இதனால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறுப் பல்கலைக்கழகங்கள்தேர்வுகளை ஒத்திவைத்து, பின்னர் மறு தேதிகளை அறிவித்தன.நவம்பர் 9-ஆம் தேதி முதல், 28-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 1-ஆம் தேதி முதல், 14-ஆம் தேதி வரை நடத்தப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.இந்நிலையில், திங்கள்கிழமை முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.


தொடர்ந்து, 3 நாள்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதன் காரணமாக, டிச.1, 2-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளை மீண்டும் ஒத்திவைத்து சென்னைப் பல்கலைக்கழகம், திங்கள்கிழமை (நவ.30) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான மறுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...