சிறப்புப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்புப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையாளர் மணிவாசன்
திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காது கேளாதோர்- பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்-துணைவிடுதிக் காப்பாளர் பணியிடங்கள் சில காலியாகவுள்ளன. தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 15-ஆம் தேதி வரை அனுப்பலாம். இந்தப் பணியிடங்கள் குறித்த அனைத்து அறிவுரைகள், விவரங்கள்-மாதிரி விண்ணப்பத்தினை www.tn.gov.in, www.scd.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...