அனைத்தும் இழந்த மக்களுக்காக களமிங்கியது SSTA குழு...

(அறத்தினூஉங்கு ஆக்கம்இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு) என்ற வள்ளூவர் வாக்குபடி     (பொருள்;ஒருவருடைய வாழ்க்கையில் அறத்தைவிட நன்மையானது ஏதும் இல்லை ,அறத்தை மறப்பது போன்ற கொடியது எதுவும் இல்லை).  

     06/12/2015 ஞாயிறு, சென்னையில் கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக SSTA குழுவினர்,  உடன் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ,குறுவள மைய ஆசியர்கள்,தன்னார்வலர்கள் மூலம்  சேகரிக்கப்பட்ட சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட 20  வகையான நிவாரணப்பொருட்களை ( உணவு உட்பட ) மழையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளை நேரில் கண்டு தேவையான பொருட்களை நேரடியாக கைப்பட வழங்கியதில் மகிழ்ச்சி. இதுபோன்ற ஓர் உதவி செய்வதற்கு தேவையான பொருட்களையும், பணத்தையும் வழங்கிய உங்களையே சேருகிறது.....
பொருட்கள்  வழங்கப்பட்ட இடங்களில் குறிப்பிடத்தக்கவை: மிகவும் பாதிக்கப்பட்ட வடசென்னை பகுதிகளான....

1. கொருக்குப்பேட்டை
2. தண்டையார்பேட்டை
3. புளியந்தோப்பு
4. கோயம்பேடு
5. ஜெ ஜெ நகர்
6. சத்யா நகர்
7. அமைந்தகரை
8. S.I.T காலனி
9. புது காலனி
10. வியாசர்பாடி

போன்ற கவனிப்பாரற்ற  பாமர மக்கள் உள்ள இடங்கள்.சென்னை மக்கள் நிவாரண பணிகளில்  SSTA. ...

🌹 நிவாரண பொருட்களையும் லாரியில் ஏற்றி அதிகாலையில் சென்னை நோக்கி பயணப்பட்டோம்.
🌹வழி நெடுகிலும் சேகரித்து வைத்த பொருட்களை ஏற்றி கடைசி கட்டத்திற்கு சென்றோம்.
🌹வழங்கிய நிவாரண பொருட்கள் பட்டியல்.
* பிரிஞ்சி
* சப்பாத்தி
* தண்ணீர்
* ஊறுகாய்
* பிஸ்கட்
* ரஸ்க்
* பால்பவுடர்
* பிரட்  & ஜாம்
* சோப்பு
* பேஸ்ட் & பிரஸ்
* மெழுகுவர்த்தி
* தீப்பெட்டி
* சானிட்டரி பேட்
(பெண்கள் & குழந்தை)
* ஹார்லிக்ஸ் சிறியது
* அமிர்தாஞ்சன் / விக்ஸ்
* மருந்து பொருட்கள்
* அரிசி(2கி X185)
* புதிய உடைகள்
* நல்லநிலை பழைய உடைகள். ...
சேகரிக்கப்பட்ட பொருள்கள் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான
20  வகையான நிவாரணப் பொருட்களை கனமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 11 இடங்களில் வழங்கினோம்.


 நிவாரணப் பொருள்கள் வழங்கும் போதும்  கனமழை பெய்தும் , மதிய உணவு கூட உண்ணாமலும்  ( மக்கள் படும் துன்பத்தை பார்த்து உண்ண மனமில்லாது ) இரவு வரை சோர்வின்றி இப்பணியை களத்தில்
சாத்தியமாக்கிய                       திரு.இராபர்ட்,
 திரு.கண்ணன், திரு.வேல்முருகன்,  திரு.ஞானசேகரன், திரு.எழில்மாறன், திரு.காந்தி, திரு.முனியப்பன்,  நாமக்கல்  திரு.விஜயானந்த்,  வேலூர் திரு.அருண் & திரு. சேகர்
ஆகியோர்களுக்கு
நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் நேற்றைய நிவாரண பொருட்களை பல இன்னல்களுக்கு இடையே சேகரித்து ஒன்றிணைத்த மதுரை,  ஈரோடு,  வேலூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் ... நன்றி.. நன்றி... உலகில் எங்கு மக்கள் வேதனையில் இருந்தாலுல் உதவி செய்வோம் என்று  தங்கமனதுடன்  மனமுவந்து பணம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கிய அனைத்து ஆசிரிய உறவுகளுக்கும்,பொதுமக்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் SSTA  சிரம்தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறது...🌹🌹🌹

பலத்த மழையும்பாராமல்
நேரடியாக நிவாரணப்பொருட்களை வழங்கிய அனைத்துப்பொருட்களையும் அனைத்து தரப்பிலிருந்தும் பெற்றுத்தந்த ஆசிரியர்கள் ,தங்கள் உணவு பெரிதென்று கருதாமல்    (அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்                                 பெற்றான் பொருள்வைப்புழி )அனைத்தையும் இழந்தவர்களுக்கு ஓர் வேளையாவது உண்ண உணவு ,உடை அளிக்க உதவிய ஆசிரிய உடன்பிறப்புகள் அனைவருக்கும், இதற்காக இறைவனிடம் வேண்டிய ,செய்திகளை பகிர்ந்த நல்ல உள்ளங்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த நன்றி,நன்றி, நன்றி.                                 (இது வெற்று விளம்பரத்திற்காக அல்ல ...அனைத்தையும் இழந்தவர்களின் கால் சாண் வயிற்றுக்கும்,அவர்களின் குழந்தைகளுக்கும்... இதை காண்பவர்கள் தங்களால் ஆன உதவிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும் என ஊக்கப்படுத்துவதற்காக தான்)

சிறிய வேண்டுகோள்;
நீங்கள் பொருளள் உதவியும், பண உதவியையும் கேட்டு வேறு  குழுவிற்கிற்கு இது தொடர்பான  செய்திகளைகளை அனுப்பியிருந்தால் இந்த நன்றி தெரிவிக்கும் மெசேஜையும் அந்த குழுக்களில் அனுப்பி விடவும்.....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...