சென்னை உட்பட, பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்குப் பின், அரசின் இலவச திட்டங்கள் மீதான கவர்ச்சி, மக்களுக்கு குறைந்து வருகிறது. இதன் விளைவாக, தமிழக அரசின் பொங்கல் பரிசை வாங்க, 10 லட்சம் பேர் மறுத்துள்ளனர்.
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியின் போது, 1.52 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச கலர், 'டிவி' வழங்கப்பட்டது. 2011ல் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், 1.85 கோடி குடும்பத்தினருக்கு, இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி அல்லது மின் அடுப்பு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில், இலவச பொருட்கள் வழங்க, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு உள்ளது.கடந்த டிசம்பரில், சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், லட்சக்கணக்கானோர் பொருட்களை இழந்து நடுத்தெருவில் நின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை.அத்துடன், இலவச திட்டங்களுக்கு செலவழித்த நிதியை, சாலை, உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, மின் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு திருப்பி விட்டிருந்தால், மின் பற்றாக்குறை, வேலையில்லா திண்டாட்டம், வெள்ளப் பெருக்கு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டிருக்காது என்ற கருத்தும் தற்போது வலுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 1.91 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்பு துண்டு, 100 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பை, ஜன., 6ல் அறிவித்தது. இதை,
பொங்கலுக்கு முன் வழங்கும்படியும், உணவுத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.ஜன., 9 முதல், ரேஷன் கடைகளில், பொங்கல்பரிசு வினியோகம் துவங்கியது. இதை வாங்க கடைசி நாளான, நேற்று மதியம், 2:30 மணி வரை, 1.81 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு வாங்கி உள்ளனர்; 10 லட்சம் பேர் வாங்கவில்லை.இது, சென்னை உட்பட, பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிற்கு பின், தமிழக அரசு வழங்கும் இலவசங்களை மக்கள் வாங்க மறுப்பதை காட்டுவதாகவும், இலவசங்கள் மீதான கவர்ச்சி குறைந்து வருவதை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. இதனால், வரும் சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, வசதி படைத்த பலர், இலவச அரிசி பெறும் தகுதி உடைய ரேஷன் கார்டு வைத்துள்ளனர். இவர்கள், வீட்டில் பணிபுரியும் ஊழியர்களிடம் ரேஷன் கார்டை கொடுத்து, பொருட்களை வாங்கும்படிகூறுகின்றனர். அதனால், அரசுக்கு கூடுதல் செலவு

Advertisement
ஏற்படுகிறது. வெள்ளப் பாதிப்பிற்கு பின், படித்தவர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட பலர், அரசின் இலவசங்களை புறக்கணிக்கின்றனர். இதனால் தான், வெள்ள நிவாரண கணக்கு எடுக்கச் சென்ற போது, 'நிவாரணம் வேண்டாம்' என, பலர் கூறிவிட்டனர். இதேபோல், தற்போது, 10 லட்சம் பேர், பொங்கல் பரிசை வாங்க மறுத்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
விடுபட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்:
'விடுபட்டவர்களுக்கு, விரைவில் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.வெள்ள நிவாரண கணக்கெடுப்பு முடிவில், 30 லட்சம் பேருக்கு, நிவாரண உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, 14 லட்சம் பேருக்கு, 5ம் தேதி அவர்களின் வங்கி கணக்கில், தலா, 5,000 ரூபாய் செலுத்தப்பட்டது. மீதமுள்ள, 16 லட்சம் பேருக்கு, 11ம் தேதிக்குள், நிவாரணத் தொகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், 11ம் தேதி பணம் செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக, நிவாரணத் தொகை வருமா; வராதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோருக்கு, நிவாரணத் தொகை வழங்கப்பட்டு விட்டது. எஞ்சியவர்களுக்கும் மிக விரைவில், வெள்ள நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்' என, அறிவித்துள்ளார்.