கோவை ஆலாந்துறையைச் சேர்ந்த லதா- சுப்பிரமணியத்தின் ஒரே மகள் எஸ்.ஹரிப்பிரியா (24). எம்.எஸ்சி ஃபேஷன் டெக்னாலஜி படித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு சிறுவயதிலேயே படிக்கிற வாசகங்களை தலைகீழாக எழுத வேண்டும் என்ற ஆசை உள்ளது. கணித எண்கள், தமிழ், ஆங்கில
வார்த்தைகளை இடமிருந்து வலம் எழுதுவதற்கு பதிலாக, வலமிருந்து இடமாக தலைகீழாக எழுதி, பார்த்தார். அவர் பிளஸ் 2 படிக்கும்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் 1330 திருக்குறளையும் சுமார் 2 ஆண்டுகளில் எழுதி முடித்தார்.
அதையே நுணுக்கி எழுதினால் எத்தனை பக்கத்தில் எழுதமுடியும் என்பதை அறிய அரிசியில் வார்த்தைகளை எழுதக்கூடிய (லென்ஸ் வைத்து பார்த்தால் மட்டுமே படிக்க முடியும்) பேனா நிப் பயன்படுத்தி எழுத ஆரம்பித்தார். அதையே. திருவள்ளுவர் ஓவியத்தில் எழுதி னால்...? 3 அடிக்கு 1.5 அடி உயர, அகலமுள்ள ஓவியத்தில் உள்ள வள்ளுவரின் தாடியிலும், ஆடையிலும் மட்டும் எழுதினார். 1330 குறளையும் தலைகீழாக 3 நாளில் எழுதி முடித்தார்.
அண்மையில் ஆலாந்துறையில் இதற்காக நியமிக்கப்பட்ட நடுவர் முன்னிலையில் எழுதினார். 24 மணிநேரம், 35 நிமிடம், 35 நொடிகளில் அத்தனை திருக்குறளையும் தலைகீழாக எழுதி முடித்தேன். தமிழ்மொழியின் அரும்பெரும் மறையான திருக்குறளை உலகு அறியச் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காகவே இதை செய்துள் ளேன் என்று கூறினார்.