மருத்துவத் தேர்வு: விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி!

முதுநிலை மருத்துவத் தேர்வுக்கு விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய செவ்வாய்க்கிழமை (ஜன. 19) கடைசி நாளாகும்.
 தமிழக மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம், முதுநிலை பல் மருத்துவம், முதுநிலை பட்டயப் படிப்பு, ஆறு ஆண்டுகள் முதுநிலை நரம்பியல் அறுவைச் சிகிச்சை ஆகிய படிப்புகளில்
அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகள் பல கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
 தமிழக ஒதுக்கீட்டு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 14-இல் நடைபெறவுள்ளது. இதற்கு நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது. விண்ணப்பங்களை www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்ய ஜனவரி 19-ஆம் தேதி கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு முடிந்த ஒரு வாரத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...