புத்தாண்டின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் துவங்குவது மரபு. அதன் படி,
'இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், 20ம் தேதி, காலை, 10:30 மணிக்கு துவங்குகிறது; கவர்னர் ரோசய்யா உரையாற்றுகிறார்' என, சட்டசபை செயலர் ஜமாலுதீன் நேற்று அறிவித்தார்.
கவர்னர் உரையில், அரசின் சாதனைகள் குறித்த விவரம் இடம்பெறும்; புதிய அறிவிப்பும் வெளியாகலாம். கவர்னர் உரை முடிந்ததும், அலுவல் ஆய்வு குழு கூடும். எத்தனை நாட்கள், சட்டசபை கூட்டத்தை நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.
கூட்டம், நான்கு நாட்கள் நடைபெறும் என தெரிகிறது. இதில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசுவர்; இறுதி நாளில், முதல்வர் ஜெயலலிதா பேசுவார்.
தே.மு.தி.க., பங்கேற்குமா: கடந்த, 2015 பட்ஜெட் தொடரில், பிப்., 19ம் தேதி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., மோகன்ராஜ், அப்போது முதல்வராக இல்லாமல் இருந்த, ஜெயலலிதா குறித்து பேசினார்; அது, சபையில் அமளியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதில், ஆறு பேர் மீது, சபை காவலர் தாக்கப்பட்ட விவகாரத்தில், உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த 6 பேர் தவிர, பிற, 13 எம்.எல்.ஏ.,க்கள், 20ம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.