ஆசிரியராக பணியாற்றும் சகோதரி இடம் மாறுதலுக்காக வாங்கிய பணம் ரூ.3,50 லட்சத்தை கொடுக்க மறுத்த அ.தி.மு.க., பிரமுகர் மிரட்டியதால், மனமுடைந்த டிரைவர் விருதுநகர் கலெக்டர் முன் தீக்குளிக்க முயன்றார்.அவரை போலீசார் கைது செய்தனர்.
இங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க கலெக்டர் ராஜாராமன் வந்தார். அப்போது , பாட்டிலுடன் ஓடி வந்த ஒருவர் அதிலிருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காது அதிர்ச்சியுற்ற கலெக்டர், அங்கிருந்து நகர்ந்தார். அதற்குள் பாதுகாப்பில் இருந்த போலீசார் அவரை பிடித்து, பெட்ரோல் பாட்டிலையும் பறித்தனர்.இதை தொடர்ந்து அவரை சூலக்கரை போலீசார் கைது செய்தனர்
விருதுநகர் டிரைவர்அவரிடம் விசாரித்த போலீசார் கூறுகையில்,'தீக்குளிக்க முயன்றவர் விருதுநகரைச் சேர்ந்த டிரைவர் அய்யனார்,29. இவரது சகோதரி பிரகதீஸ்வரி சேலம் அரசு பள்ளி ஆசிரியை. அவருக்கு டிரான்ஸ்பர் பெறுவது தொடர்பாக,
சிவகாசி அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கருப்பசாமியின் மருமகன் பாலசந்திரன், உறவினர் சிவாவிடம் ரூ.3.50 லட்சம் கொடுத்துள்ளதாக அய்யனார் கூறுகிறார். ஆனால் டிரான்ஸ்பர் கிடைக்கவில்லை, பணத்தையும் கொடுக்கவில்லை, பணம் கேட்டபோது மிரட்டுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்,'
என்றனர்....