வங்கி ஊழியர் 'ஸ்டிரைக்' ரூ.25,000 கோடி 'அவுட்'!

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, நேற்று, நாடு முழுவதும், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனை முடங்கியது.'பாரத ஸ்டேட் வங்கி யின், ஐந்து துணை வங்கிகளை, இணைக்கக் கூடாது; ஊழியர்கள் வேலை நேரத்தை, ஒப்பந்தத்தை மீறி செயல்படுத்த கூடாது' உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில், நேற்று வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தவிர பிற தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள், தனியார் வங்கி ஊழியர் என, 40 வங்கிகளின், 80 ஆயிரம் கிளைகளை சேர்ந்த, ஐந்து லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனால், வங்கிகளின் அன்றாடப் பணிகள் முடங்கின. நாடு முழுவதும், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, காசோலை பரிவர்த்தனை முடங்கியது. தமிழகத்தில், 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் முடங்கின என, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இன்றும், நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், முடங்கிய காசோலைகள், திங்கள்கிழமை தான் பரிவர்த்தனைக்கு எடுத்து கொள்ளப்படும் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...