மக்கள் மனு மீது 30 நாளில் நடவடிக்கை!

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது, ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, துறை அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.


அதன் விவரம்:
* பொது மக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்றதற்கான ஒப்புகையை, மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் வழங்க வேண்டும்
* ஒப்புகை அளித்த ஒரு மாதத்துக்குள், மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை, மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்
* நடவடிக்கை எடுக்க, கூடுதல் அவகாசம் தேவை என்றால், அதற்கான காரணத்தை, எழுத்து மூலம் மனுதாரருக்கு, அதிகாரிகள் கூற வேண்டும். இதேபோல், மனுவை தள்ளுபடி செய்தற்கான காரணத்தையும், ஒரு மாதத்துக்குள் சொல்ல வேண்டும்
* இந்த ஆணையை, அனைத்து அதிகாரிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும். மூத்த அதிகாரிகள், தன் சக ஊழியர்களிடம், இந்த ஆணை குறித்து தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு ஆணையில் கூறப்பட்டு உள்ளது.

இது வரவேற்கத்தக்கது; கால தாமதம் தவிர்க்கப்படும். பொது மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்.
சடகோபன், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத் தலைவர் -

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...