தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, கி.மு., ௩ம் நுாற்றாண்டிலேயே நடந்ததற்கான ஆதாரமாக, நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, அதை ஆய்வு செய்த, தென்னிந்திய நாணயவியல்
ஆய்வுக் கழகத் தலைவர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் சொல்கிறார்:
கொற்கை துறைமுகம், சங்க காலத்தில் மிகச் சிறப்பான வணிக கேந்திரமாக இருந்திருக்கிறது. கொற்கையில் விளைந்த முத்துக்களை வாங்க, மேலை நாட்டு கிரேக்க வணிகர்களும், ரோமானியர்களும் வந்திருக்கின்றனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும், பெரிய மரக்கலன்களில் வணிகர்கள் வந்திருக்க வேண்டும்.சங்ககாலத்தில் கொற்கை வணிகர்கள், கடல் வாணிபத்தில் மிக சிறப்பாக இருந்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள், தங்கள் மரக்கலன்கள் மூலம், கீழ் திசை நாடுகளுக்கு சென்று, அங்குள்ள பொருட்களை வாங்கி வந்திருக்கின்றனர். அவ்வாறு வரும்போது, இயற்கையாக கிடைத்த வெள்ளீயத்தையும் கொண்டு வந்திருக்கின்றனர்.
அந்த வெள்ளீயத்தை சுற்றியிருக்கும் கல் கட்டிகளை உடைத்து, சுத்தம் செய்து, வெள்ளீயத்தை மட்டும் பிரித்தெடுத்து, உருக்கி இருக்கின்றனர். அவ்வாறு எடுத்த வெள்ளீயத்தை, நாணயங்கள் செய்ய பயன்படுத்தியுள்ளனர். அந்த வெள்ளீயத்தால் செய்யப்பட்ட நாணயத்தின் படம், மேலே வெளியிடப்பட்டுள்ளது.
முன்புறம்: நாணயத்தின் முன்புறத்தில், எருது ஒன்று இடப்பக்கம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. மாட்டின் கொம்பிற்கு அருகில், முழுமையாக அச்சாகாத 'மா' என்ற எழுத்து தெரிகிறது. இந்த எழுத்தின் இடது பக்கத்தில் மேல்பகுதி சரியாக அச்சாகவில்லை. இந்த எழுத்து, மவுரிய பிராமி வகையைச் சேர்ந்தது. எருதின் மேல்புறம் 'ற' என்ற எழுத்து, இடமிருந்து வலப்பக்கம், படுத்திருக்கும் நிலையில் உள்ளது. இந்த எழுத்து, நின்ற நிலையில் தான் இருந்திருக்க வேண்டும். இடப்பற்றாக்குறையால், படுத்த நிலையில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த எழுத்து, தமிழ்-பிராமி வகையைச் சேர்ந்தது. கடைசி எழுத்தான, 'ன்' - தமிழ்-பிராமி எழுத்து முறையில் உள்ளது. இந்த மூன்று எழுத்துக்களையும் சேர்த்தால், 'மாறன்' என்ற பெயர் வரும். புறநானுாற்று பாடல்களில் மாறன் பெயரைப் பார்க்கலாம்.
எருதின் பின்புறம், மிகத் தொன்மையான சின்னம் ஒன்று உள்ளது. அச்சின்னத்தில், நடுவில் ஒரு வட்டமும், அதை சுற்றி இரண்டு, 'டவுரின்' சின்னங்களும், இரண்டு பெரிய புள்ளிகளும் உள்ளன. இந்தச் சின்னம், மிகத் தொன்மையான, கி.மு., ஐந்தாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வெள்ளி
முத்திரை நாணயங்களில் காணப்படுகிறது.எருதின் முன்புறம் இருக்கும் சின்னம் சரியாகத் தெரியவில்லை. மிக நுட்பமாக ஆய்வு செய்தால் அது, சிறு ஆறு போல் தெரிகிறது. ஆற்றில் சில 'டவுரின்' சின்னங்கள், தெளிவில்லாமல் இருப்பதைக் காணலாம். இதுபோன்ற சின்னம், மிகப் பழைமை வாய்ந்தது. கி.மு., 5 ஆம் நுாற்றாண்டில் உள்ள சில வடநாட்டு பழங்குடியினர் வெளியிட்ட நாணயங்களில் இதை காண முடியும்.
பின்புறம்: தெளிவில்லாமல் தேய்ந்த நிலையில் உள்ளது. மிக நுட்பமாக ஆய்வு செய்தால், ஒரு வீரன், எருதை அடக்க முயற்சிப்பதுபோல் தெரிகிறது. தொன்மைக் காலத்திலேயே, 'ஜல்லிக்கட்டு' விளையாட்டு இருந்திருக்கலாம்.சங்ககால மதுரைப் பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்களின் பின்புறம், கோட்டு வடிவ மீன் சின்னம் கண்டிப்பாக இருக்கும். அந்தச் சின்னம், இந்த நாணயத்தில் காணப்படாததால், இந்த நாணயம், சங்ககால கொற்கைப் பாண்டியர்களால் வெளியிடப்பட்டது என்று உறுதியாக நம்பலாம்.தமிழரின் தொன்மை கடல் வாணிபத்தையும், அயல்நாட்டினருடன் உள்ள தொடர்புகளையும், நாம் சரியாக ஆய்வு செய்யவில்லை. நமது தொன்மைக்கு, சங்க இலக்கியங்கள் முக்கியமான சான்றுகளாக இருந்தாலும், கடல் வாணிபம் குறித்து தெளிவு பெற, தொன்மை நாணயங்கள் நமது ஆய்வுக்கு பெரும் சான்றுகளாக இருக்கும்.இந்த நாணயத்தின் காலம், கி.மு., மூன்று அல்லது கி.மு., நான்காம் நுாற்றாண்டாக இருக்கலாம்.