வருங்கால வைப்பு நிதி பெற... 3 நாள் போதும்!

""வருங்கால வைப்பு நிதியை, குறைந்த பட்சம் மூன்று நாட்கள், அதிகபட்சம், 10 நாட்களுக்குள் தொழிலாளர்கள் பெறலாம்,'' என, கோவை பி.எப்., உதவி கமிஷனர் கலீல் ரஹ்மான் அறிவுறுத்தினார்.

வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, திருப்பூர் "சைமா' கூட்டரங்கில் நேற்று நடந்தது;
பொது செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். திருப்பூர் பி.எப்., அமலாக்க அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.

அதில், கலீல் ரஹ்மான் பேசியதாவது: தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி சேவையை விரைவாகவும், சுலபமாக பெறும் வகையில், "யுனிக்' எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை, இ-மெயில் முகவரி, மொபைல் எண் வாயிலாக, ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். 2014 முதல், இச்சேவை நடைமுறையில் உள்ளது. எனினும், "யுனிக்' எண் பதிவு செய்த தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளடக்கிய கோவை மண்டலத்தில், ஒன்பது லட்சத்து, 95 ஆயிரத்து, 751 பேருக்கு "யுனிக்' எண் வழங்கப்பட்டுள்ளது. இதில், மூன்று லட்சத்து, 65 ஆயிரத்து, 72 பேர் மட்டுமே, ஆன்-லைனில் விவரங்களை பதிவு செய்துள்ளனர். அந்தந்த நிறுவனத்தினர், ஆன்-லைனில் பதிவு செய்ய, தொழிலாளர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

பி.எப்., தொகையை பெறுவது சிக்கல் என, பலரும் தவறாக கருதுகின்றனர். புதிய நடைமுறைகளால், குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகபட்சம், 10 நாட்களில், தொழிலாளர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகையை பெறலாம். தொழிலாளர்
கணக்கில், தொழில் நிறுவனங்கள் மாதம் தோறும் பி.எப்., தொகை செலுத்துவதில், இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த

நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இனி, பி.எப்., தொகையை, "ஆன்-லைன்' வாயிலாக செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிப்., 1 முதல், பி.எப்., தொகையை, "ஆன்-லைன்' மூலம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும், பி.எப்., தொகையை, 15க்குள் செலுத்த வேண்டும். "ஆன்-லைன்' காரணமாக, தற்போது நடைமுறையில் உள்ள, ஐந்து நாள் அவகாசம் நீக்கப்படுகிறது; இல்லையெனில், ஐந்து முதல், 25 சதவீதம் வரை அபராதம் செலுத்த வேண்டி வரும். தொழிலாளர்கள் ஆன்-லைன் சேவையை பயன்படுத்த, தொழில் நிறுவன உரிமையாளர்கள், மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் உதவ வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

பி.எப்., கம்ப்யூட்டர் மைய தொழில்நுட்ப வல்<லுனர் ரவிகிருஷ்ணன் பேசுகையில்,""தொழிலாளர்கள், தங்களது "யுனிக்' எண்ணை ஆன்-லைனில் பதிவு செய்வதில் இருந்த, தொழில்நுட்ப சிக்கல்கள் சரி செய்யப்பட்டுள்ளன. தங்கள் கணக்கில் பதிவு செய்த மொபைல் எண், இ-மெயில் முகவரியையும் மாற்றலாம். "ஆன்-லைன்' பதிவுகள், தொழிலாளர்களுக்கு பயனளிக்கும். வேறு நிறுவனத்துக்கு மாறினாலும், இந்த எண் வாயிலாக, பி.எப்., கணக்கை தொடரலாம்,'' என்றார். பின்னலாடை நிறுவன மனிதவள மேம்பாட்டுஅலுவலர்கள் பங்கேற்று, பி.எப்., சார்ந்த சந்தேகங்களை கேட்டறிந்து, தெளிவு பெற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...