8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தேர்வு பிப்.27-க்கு ஒத்திவைப்பு!

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி உதவித் தொகைக்கான தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.


 இதற்கு மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக வட்டார அளவில் வருகிற 23-ஆம் தேதி தேர்வு நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில் அண்மையில் பெய்த மழை பாதிப்பால் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், பருவத் தேர்வுகள் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளதாலும் தேசிய வருவாய் வழி உதவித் தொகைத் தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...