3 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும்!

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் பிப்ரவரி 8-ஆம் தேதி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்- பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
 தமிழக அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றக்கூடிய பணியிடங்கள் எத்தனை உள்ளது என்பதைக் கண்டறிந்து, நிமயனம் மேற்கொள்ள வேண்டும்.
 தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் 40 சதவீத குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது.
 ஆனால் தமிழகத்தில், குறைந்தபட்சம் 60 சதவீதம் குறைபாடு இருக்க வேண்டும் என்றும், மேலும் அவர்களும் ஆதரவற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் விதி உள்ளது. இது பல்வேறு குழப்பங்களை உருவாக்குகிறது.
 மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் முறையான கணக்கெடுப்பு நடத்தி, மாற்றுத்திறனாளிகளின் சரியான எண்ணிக்கையை கணக்கிட வேண்டும்.
 இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் சார்பில் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை எழிலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார் அவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...