தமிழகத்தில் 579 லட்சம் வாக்காளர்!

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 579 லட்சம் வாக்காளர், வரும் சட்டசபை தேர்தலில், ஓட்டுப்போட உள்ளனர். இவர்களில், 12.33 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம்.
தமிழகத்தில், வரைவு வாக்காளர் பட்டியல், 2015 செப்., 15ல்
வெளியிடப்பட்டது. அன்று முதல், அக்., 24 வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
*பெயர் சேர்க்க, 17.10 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன; 16.18 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன
*இடப்பெயர்ச்சி, இறப்பு, இரட்டைப்பதிவு ஆகிய காரணங்களுக்காக, 3.85 லட்சம் வாக்காளர் பெயர் நீக்கப்பட்டுள்ளது
*திருத்தம் செய்யக் கோரி, 2.67 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன; 2.56 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன
*தொகுதிக்குள்ளே முகவரி மாற்ற கோரி, 1.29 லட்சம்விண்ணப்பங்கள் வந்தன; 1.13 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இப்பணிகள் முடிந்து, நேற்று, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், 5.79 கோடி வாக்காளர் உள்ளனர். இவர்களில், 2.88 கோடி பேர் ஆண்கள்; 2.91 கோடி பேர் பெண்கள்; 4,383 திருநங்கையர் உள்ளனர். வாக்காளர் பட்டியலில், புதிதாக, 12.33 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிக வாக்காளர் உள்ள தொகுதி:
அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி, காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லுார். இங்கு, 2.91 லட்சம் ஆண்கள்; 2.83 லட்சம் பெண்கள்; திருநங்கையர், 45 என, மொத்தம், 5.75 லட்சம் வாக்காளர் உள்ளனர். 18 - 19 வயதிற்குட்பட்ட வாக்காளர் அதிகம் உள்ள தொகுதி என்ற பெயரையும் இது பெற்றுள்ளது. இங்கு, 7,214 ஆண்கள்; 5,583 பெண்கள் என, மொத்தம், 12,797 இளைய வாக்காளர் உள்ளனர்.
*பணித்தொகுதி வாக்காளர் எனப்படும் ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அதிகம் உள்ள தொகுதி, மதுரை மாவட்டம், திருமங்கலம். இங்கு, 2,402 பேர் பணித்தொகுதி வாக்காளராக உள்ளனர்
*முதன் முறையாக, வெளிநாடு வாழ் வாக்காளர், 47 பேரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலை, http://elections.tn.gov.in/ என்ற தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இணைய தளத்தில் காணலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...