9 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் !

சென்னை, மதுரை உள்பட 9 மாவட்ட ஆட்சியர்களை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு:
 (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)
 டி.பி.ராஜேஷ்-கரூர் மாவட்ட ஆட்சியர் (கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்)
 சி.கதிரவன்-கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் (மதுரை மாநகராட்சி ஆணையாளர்)

 கே.நந்தகுமார்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் (ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்)
 எஸ்.ஜெயந்தி-திருப்பூர் மாவட்ட ஆட்சியர் (கரூர் மாவட்ட ஆட்சியர்)
 கே.வீரராகவராவ்-மதுரை மாவட்ட ஆட்சியர் (திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்)
 ஜி.கோவிந்தராஜ்-சென்னை மாவட்ட ஆட்சியர் (திருப்பூர் மாவட்ட ஆட்சியர்)
 எஸ்.நடராஜன்-ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநர்)
 இ.சுந்தரவல்லி-திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் (சென்னை மாவட்ட ஆட்சியர்)
 எல்.சுப்பிரமணியன்-வருவாய் நிர்வாக இணை ஆணையாளர் (மதுரை மாவட்ட ஆட்சியர்)
 சென்னை மாநகராட்சி: சென்னை மாநகராட்சி ஆணையாளராக இருந்த விக்ரம் கபூர், சென்னை குடிநீர்-கழிவுநீர் அகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநராகவும், சென்னை குடிநீர்-கழிவுநீர் அகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்த பி.சந்திரமோகன், சென்னை மாநகராட்சி ஆணையாளராகவும் மாற்றம் செய்து ஞானதேசிகன் உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...