சீர்காழி அருகே, அரசு பள்ளியின் பூட்டை உடைத்து, 7.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 48 மடிக் கணினிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த கொண்டல் கிராமத்தில், ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு
வழங்குவதற்காக, 81 இலவச மடிக் கணினிகள், கொண்டு வரப்பட்டு, தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.நேற்று காலை, மடிக் கணினிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு, ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அந்த அறையிலிருந்த 7.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 48 மடிக் கணினிகள் திருடு போனது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.