ஆபிரகாம் லிங்கனும், ஜவுளிக்கடை ஓனரும்!- புத்தாண்டுக்கான சிறுகதை

துரை காலையில் கடைக்கு வரும் போது கடை வாசலில ஏதோ பரபரப்புஅவர் ஜவுளிக்கடையில் வேலை பார்ப்பவர்கள் ஒரு ஆளை பிடித்து வைத்து கொண்டு இவர் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

பிடிபட்டவன் கடைசியில் திருடவந்தவனா அல்லது நோட்டமிட்ட வந்தவனா என்ற யோசனையுடன் கடையை நெருங்கி ஏன் இந்த ஆளை பிடிச்சு வைச்சிருக்கீங்க என்று கேட்டார். அதற்கு அவர்கள் சொன்ன பதிலை கேட்டு அவருக்கு பூ இவ்வளவுதானா என்றிருந்தது.

அட அவரை விடுங்கப்பா அந்த தம்பி மட்டும் தானா என்னை இப்படி சொல்றார். ஊர் சொல்லுது உலகம் சொல்லுது, அதுக்காக எல்லோரையும் பிடிச்சுவச்சிக்க முடியுமா ...மேலும் அவங்க சொல்றது உண்மைதானே, இன்னைக்கு நான் ஒரு ஜவுளி கடைக்கு முதாலளின்னாலும் ஒரு நேரத்துல இந்த மார்க்கெட்ல மூட்டை தூக்கி தானே , ஒரு நாளா இரண்டு நாளா பதினைஞ்சு வருஷம் மூட்டை தூக்கியிருக்கேன் என்றவர்,ஊழியர்கள் பிடியில் இருந்து இளைஞனை விடுவித்து அவன் கசங்கிய சட்டைக் காலரை சரி பண்ணி விட்டு, கடை திண்ணையில் அமர்த்திக்கொண்டார். அவனுக்கு டீ வாங்கிக் கொடுத்தார்.

தம்பி நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் ஒரு மூட்டை தூக்கி தான் அதை நானே தினமும் பத்து முறை கடைப் பசங்ககிட்ட சொல்லி கிட்டிருப்பேன்பழசை மறக்ககூடாதுல, தம்பி நீங்க ஆப்ரகாம் லிங்கன் பத்தி கேள்ளவிபட்டிருக்கீங்களா

சந்தேகமாக தலையசைத்தான் அவன்அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார். அவர் ஆரம்ப காலத்தில் செருப்பு தைக்கும் தொழிலை செய்தவர், ஜனாதிபதியான பின் அவங்க பாராளுமன்றத்தில் ஒரு கூட்டத்தில் அவருக்கும், எதிர்க்கட்சி உறுப்பினருக்கும் இடையில் விவாதம் எழுந்தது அப்போது அந்த உறுப்பினர் சபையில் லிங்கனை அசிங்கப்படுத்த நினைத்து செருப்பு தைக்கும் தொழில் செய்தவர் தானே நீங்க என்றார்.

பாராளுமன்றமே அந்த அநாகரிகப் பேச்சைக் கேட்டு திடுக்கிட்ட நிலையில் லிங்கம் நிதானம் இழக்காமல் ஆமாம் நான் செருப்பு தைத்தேன் ஆனால் ஒவ்வொரு ஜோடி செருப்புகளையும் தரமான தாகவே செய்தேன். ஒருபோதும் மோசமான செருப்பை தயார் செய்ததில்லை ..என்றார் அழுத்தமாக எதிர்க்கட்சி உறுப்பினர் வாய் பொத்திக்கொண்டார் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்தார் என்பது எந்த வகையில் இழிவானது அல்ல. அந்த நிலையில் இருந்து வளர்ந்து ஜனாதிபதியானது பெருமைக்குரிய விஷயம் தான்.

ஏன் இதை செல்றேன்னால் என் ஜவுளிக்கடையை பார்த்துட்டு நம்மால் இப்படி உயர முடியலையேனு நினைக்கிற பல பேரு இப்படி தான் இந்த கடை ஒனர் ஒரு காலத்துல இதே மார்க்கெட்ல மூடடை தூக்கியா இரு்த ஆளு ஒரு மூட்டைத் தூக்கிக்கு வந்த வாழ்வைப் பாருகன்னு காதுபட பேசத்தான் செய்றாங்க.

மூட்டை தூக்கியா இருந்ததுல எனக்கு அசிங்கம் ஒண்ணுமில்லை நான் லிங்கன்இல்லை. ஆனால் அன்ணைக்கு லிங்கன் சொன்து நினைவுக்கு வந்ததால நானும் பெருமையா சொல்லிக்கிறேன். நான் ஒரு நல்ல சுமைதூக்கி என்றார்.மூட்டக்கு இவ்வளவு பணம்னு கணக்கு போட்டு நான் சுமை தூக்கினதில்லை.

நான் சுமக்கிற பொருள் எந்த சேதாரமும் இல்லாமல் சீக்கிரமா போய் சேர வேண்டிய இடத்துக்கு நல்ல விதமாக பயன்பட வேண்டிட்டு நான் சுமப்பேன். அது போய் சேருற வரைக்கும் அதே நினைப்பா இருப்பேன். சம்பந்தப்பட்ட வங்க கிட்ட மூட்டை பத்திரமா போய் சேர்ந்ததான்னு விசாரிச்சுக்கிட்டே இருப்பேன். எங்கிருந்தாவது மூட்டையை கொண்டு வந்தாலும் அப்படி தான் சரியாயிருக்கான்னு பாத்துக்கங்கன்னு செல்லுவேன், அவங்க சரியா இருக்குன்னு சொன்னபிறகு தான்அங்கிருந்து நகர்வேன்,

தோளில் சுமக்கிறதுக்கு முன்ன நாலுவாட்டி கோணி கெட்டியா இருக்கான்னு பார்ப்பேன், அரிசி,பருப்பு, சர்க்கரை ,உரமுன்னு எதுவா இருந்தாலும் ஒரு துளியும் சிந்திடாம கவனமாக இருப்பேன், இதனால கடைக்காரங்களுக்கு என்னை பிடிக்கும், சுமை தூக்கறதையும் கடந்த பல வேலைகளை என்கிட்ட ஒப்படைப்பாங்க கடை வாசலை பெருக்க ஆள் வரலைன்னா நானே தண்ணி தெளிச்சு பெருக்கிடுவேன். வண்டிகளைத்துடைப்பேன், கடைக்காரர் குழந்தைகளை ஸ்கூலுக்கு கூட்டிகிட்டு போவேன். மத்தவங்களுக்கு எந்த வகையிலாவது உபயோகமாக இருக்கணும்னு நினைப்பேன் என்றார்.

இங்குள்ள நிறைய பேருக்கு ஒரு விஷயம் தெரியாது... ஆமாம் நான் வசதியான குடும்பத்தில் பிறந்தவன். சவுக்கியமா வளர்ந்தவன். அப்பா ரயில்வேயில் வேலையில் இருந்தார்.எனக்கு நாலு வயசாகும் போது அம்மா செத்து போச்சு. அப்பா ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்கிட்டார். சித்தியா வந்தவங்க ஆரம்பத்துல எம் மேல ரொம்ப பாசமா தான் இருந்தாங்க. அவங்களுக்குன்னு ஒரு பிள்ளை வந்ததும் பாசமெல்லாம் அவன் பேர்ல போய் என் மேல வெறுப்பை கொட்ட ஆரம்பிச்சாங்க நான் சொத்துக்கு பங்கு கேட்டு நிப்பேன்னு சி்த்தி மனசை பலரும் கெடுத்தாங்க.அன்னையில் இருந்து என்னை திட்றது அடிக்கிறதுன்னு அப்பாவிடம் சொல்லி கலகம் மூட்டினாங்க.

அதைஅவர் அப்படியே நம்பி கண்டிக்க ஆரம்பிச்சார். ஆனா நான் ஒரு போதும் சித்தியை தப்பா நினைச்சதில்லை. என்னவோ என் நேரம் குடும்பத்துக்கே ஆகாதவனா போயி்ட்டேன். பசிக்கும் நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கல. படிப்புக்கு தடை போட்டு விறகு .பொறுக்க சி்த்தி அனுப்பினாங்க. அது பிடிக்காம வீட்டை விட்டு வெளியேறி திருட்டுதனமா ரயில் ஏறி இந்த ஊருக்கு வந்தேன். இதே கடை வீதியில வேலை கேட்ட அலைஞ்சேன். மூட்டை தூக்குற வேலை கிடைச்சது, உர மூட்டையை தலை மேல வெச்சு கடைக்கு கொண்டு போகச்சொன்னாங்க அம்பது காசு கொடுத்தாங்க அது தான் முதல் சம்பளம். இப்பவும் வைச்சிருக்கேன் என்றார்.

அன்னைக்கு ஆரம்பிச்சது சுமார் பதினைஞ்சு வருஷம் அந்த வேலையே செய்தேன். சுமை தூக்குறதுக்கும் அப்பால கடைக்காரங்க வீ்ட்டு சொந்த வேலைகளையும் முடிச்சுக்கொடுப்பேன். ஒரு விஷயத்துல தீர்மானமா இருந்தேன். எல்லா கடைக்காரங்களையும் பரிச்சயம் பண்ணிக்கிட்டேன். லாரிகளில் லோடிங் அன் லோடிங் பண்றது பணம் .கொடுக்க வாங்கனு எந்த வேலையா இருந்தாலும் கூப்பிடு துரையம்பாங்க. பதினைஞ்சு வருஷமா இந்த மார்க்கெட் மண்ணுல தான் திரிஞ்சேன். இவங்க மனசுல இடம் புடிச்சேன். நம்பிக்கையான ஆளுனு பேர் வாங்கினேன்.

ஒரு நாள் ... நமக்கும் ஒரு கடை இருந்தா எப்படியிருக்கும்னு யோசிச்சேன். எனக்கு ஜவுளி வியாபாரத்துல ஈடுபாடு உண்டாச்சு.நேரம் கிடைக்கிறப்போ ஜவுளிக்கடை வாசல்ல உட்கார்ந்து கவனிச்சிட்டுருப்பேன் உள்ளே போய் ஏதாவது வே.லையை இழுத்துப் போட்டு செய்வேன்.

துணிகள் எங்கிருந்து வருது... அதை ஜனங்க கிட்ட எப்படி விக்கிறாங்க.மக்கள் என்ன மாதிரி துணிகளை வாங்கிறாங்க, வியாபார நுணுக்கம் என்னனுன்னு புரிஞ்சுக்கிட்டேன் ஏகலைவன் மானசீகமாக வில்வத்தை கத்துகிட்டது போலத்தான்....

என் ஆசையை சிலை கடைக்காரங்க கிட்ட சொன்னேன் அவங்களும் உதவிக்கரம் நீ்ட்டினாங்க இப்படித்தான் ஜவுளிக்கடை உருவாச்சு.

கடை ஆரம்பிச்ச புதுசுல நானே முதலாளி , நானே தொழிலாளி, எனக்கு இடமும் பணமும் கொடுத்து உதவி செய்தவங்களுக்கு திருப்பிக் கொடுக்கிற வரை கடுமையா உழைச்சேன். சிக்கனமா இருந்தேன். மூட்டை தூக்கினப்போ மூணு வேளை சாப்பி்ட்டேன்.

முதலாளியான பிறகு பல நாள் ஒரு வேளை சாப்பாடு தான் .கடனை அடைக்கணுமேன்னு இரண்டு வேளை சாப்பாட்டை மிச்சம் பண்ணி பணம் சேர்த்தேன். பணம் கொடு்த்தவங்க வாய் திறந்து கேட்கறதுக்கு முன்னே திரும்ப கொடுக்க நினைச்சேன். உழைப்பாளிங்கிற பெயரோடு நாணயஸ்தான்கிற பேரும் சேர்ந்துச்சு. கடன் அடைஞ்ச பிறகு தான் ஒவ்வொரு ஆளா கடையில சேர்க்க ஆரம்பிச்சேன்,. சரக்குமு் நிறைய இறங்குச்சு வியாபாரம் பெருகிச்சு. நானும் ஒரு முதலாளியா கல்லாவில் உட்கார்ந்திருக்கேன்.

என்கிட்ட வேலை பார்க்கிறவங்களை வேலையாளா நினைக்காம என் கூடப் பொறந்தவங்களா நெனைச்சு அவங்க வீட்டு நல்லது கெட்டதுல குடும்பத்துல ஒருத்தனா குஇருக்கறதால அவங்களும் விசுவாசமா இருக்காங்க. அவங்க காதுபட மூட்டை தூக்கிக்கு வந்த வாழ்வை பாருன்னு எகத்தாளம் பேசினா பொறுத்துக்க முடியாம உங்களைப்பிடிச்சும் வச்சிட்டாங்க. அதுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக் கேட்டுக்கிறேன், என்று கும்பிட, அவன் பதறியபடி நான்தாங்க உங்க கிட் மன்னிப்பு கேட்கணும். உங்க குணத்தை புரிஞ்சுக்காம அலட்சியமா பேசி்ட்டேன்.

நீ மட்டும் அப்படி பேசலை தம்பி. ஊரே அப்படித்தான் பேசுது ஆனா ஒருத்தருக்கும் என்னோட உழைப்பும் கஷ்டமும் தெரியல. ஒருத்தன் முன்னுக்கு வந்தா ்து அதிர்ஷ்டத்துல அல்லது தவறான வழியில தான்னு நினைக்கிறாங்க. நான் கடைபிடிச்ச வழி முறை மூலமா கடை நிலையில இருக்கிற ஒருத்தர் கூட கடை ஓனரா ஆயிடலாம். ஆமா, இப்ப நீங்க என் பணறீங்க என்று கேட்க சும்மா தான் இருக்கேன் ஐயா, நினைச்சேன் சும்மா இருந்தா தான் பொறு்பபில்லாத பேச்சு வரும். இந்த நிமிஷத்துல இருந்து என் மனசு மாறிடுச்சுங்க இந்த மார்க்கெட்ல சுமை தூக்க ஆரம்பிச்சுட.றேன் என்று சொன்னவனைத் தட்டி கொடுத்து என் கடையிலேயே அந்த வேலை நிறைய இருக்கு வெளியில செய்யும் வே.லையை இங்கேயே செய்யலாம். டீயை குடிச்சுட்டு வாங்க என்றார்.

அந்த புதியவனுக்கும் சேர்த்து அந்த ஜவுளிக்கடையின் கதவு திறக்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...