இது, எங்க பேப்பர்! ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்டாடும் இதழ் 'பட்டம்'!

தினமலர்' நாளிதழ் சார்பில், மாணவர்களுக்கான புத்தம் புதிய, 16 பக்க இதழ், 'பட்டம்' இணைப்பு நேற்று வெளியானது. இந்த இதழ் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என, ஆசிரியர்கள், கல்வியாளர் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.
நேற்று வெளியான, 'பட்டம்' முதல் இதழை, நீலகிரி மாவட்டம், கூடலுாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி,
'அசெம்ளி'யில், தலைமையாசிரியர் ராபர்ட், மாணவர்கள் முன் அறிமுகம் செய்து, வாசித்துக் காட்டினார். இதழில் இடம் பெற்றுள்ள, மாணவர்களுக்கான பொது அறிவுத்திறன் மேம்பாடு கருத்துக்கள், கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார். ராபர்ட் பேசியதாவது: பல அரிய தகவல்கள், பள்ளி மாணவர்களைத் தேடி வரும் வகையில், 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' மாணவர் இணைப்பு சிறப்பாக வெளிவந்துள்ளது.
இதை வாசிப்பதன் மூலமாக, மாணவர்களின் கல்வி ஆர்வம், பொது அறிவு அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான எண்ணம் வளர இந்த இதழ் உதவும்.
இந்த இதழை படித்து முடித்தபின் துாக்கிப் போடாமல், பாதுகாத்து வைத்தால் எதிர்காலத்துக்கு உதவும். காரணம், இது, எந்த காலத்திலும் படித்து பயன்பெறக் கூடியது. மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இந்த இதழ் உதவும்.
விளையாட்டு, அறிவியல், பொது அறிவு, ஜோக்ஸ் என, சிறார்களை கவர பல விஷயங்கள் உள்ளன. இந்த, 'பட்டம்' இதழை, மாணவர்கள் தவறாமல் திங்கள் தோறும் வாங்கி வாசித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு ராபர்ட் பேசினார்.இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

'பட்டம்' இதழ்: ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து

'பட்டம்' குழந்தைகள், மாணவர்களுக்கான புதுமை இதழ். ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. மாணவர்கள் பட்டத்தைப் போன்றவர்கள்; ஆசிரியர்கள் அதை இயக்கும் நுால் கண்டு போன்றவர்கள் என்பதற்கு ஏற்ப சரியான பெயர், இந்த இணைப்புக்கு வைக்கப்பட்டுள்ளது.
நல்லமுத்து ஆசிரியர், அவ்வூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, நீலகிரி

மிகவும் அழகிய படங்களுடன், கூடுதல் தகவல்களை வழங்கியது ரசிக்கத்தக்கதாக உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான தகவல்கள் உள்ளன. மாணவர்கள் மத்தியில் இந்த பட்டம் மிகவும்
விரும்பப்படும். எஸ்.ரங்கராஜன்தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைபள்ளி, மடத்துக்குளம்

மாணவர்களுக்கு பயனுள்ள இதழ்.
வரிசை கட்டுகிறார் வரிக்குதிரை வாத்தியார் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்ட கருத்துகள் சிறப்பானவை. இந்த இதழ் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
புனிதாதலைமையாசிரியர், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி, கோவை மாவட்டம்

அறிவியல், சிறுகதை,
குழந்தைகள், ஆசிரியர்களுக்கான பகுதி என அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது. பாலின் நிறம் வெண்மையாக இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்த விளக்கம் சூப்பர்.
பூபதிஎட்டாம் வகுப்பு, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி

'பட்டம்' இதழ், பலதரப்பட்ட செய்திகளின் தகவல்
அரங்கம். எப்படி பட்டம் உயர்ந்து மேலே கிளம்புகிறதோ, அதுபோல, இந்த இதழை வாசிக்கக்கூடிய மாணவ சமுதாயத்தின் சிந்தனைகளும் உயரும்.
கனகராஜன்உதவி தலைமையாசிரியர், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி

சிறப்பான செய்திகளுடன், ரசிக்க வைக்கும் படங்களுடன் வெளிவந்துள்ளது. நுால் அறிமுகம், சிறந்த புத்தகங்கள் குறித்த விவரங்களை அடுத்த இதழ்களில் சேர்க்கலாம். மாணவர்களின் கை
எழுத்துக்களை அழகாக்கும் வகையிலான பயிற்சிகளை அளிக்கலாம். கே.பத்ரி நாராயணன்ஆங்கில ஆசிரியர், அரசு மேல்
நிலைபள்ளி, மடத்துக்குளம்


புதிதாக வெளிவந்துள்ள பட்டம் இணைப்பு, எனக்கு மேலும் ஒரு ஆசிரியர். மிக அற்புதமான தகவல்களை கற்றுத்தருகிறது. வரும் இதழ்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். கார்த்திகேயன்பத்தாம் வகுப்பு, அரசு உயர்நிலைப்பள்ளி, பெத்தநாயக்கனுார்,
பொள்ளாச்சி


வரலாற்றுச் சாதனை
படைத்த பெண்கள் கூறிய, மந்திர சக்தி வார்த்தைகளை படித்து நெகிழ்ந்தேன். 'தடையை உடைப்போம்; சாதனை படைப்போம்' பகுதி எங்களைப் போன்ற வளரும் தலைமுறைக்கு பொருத்தமானது. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...