வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்னும் பொங்கல் போனஸ் வழக்கப்படாததால் வருத்தத்தில் உள்ளனர்.
வத்திராயிருப்பு பகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 66 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 300 க்கு மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு வத்திராயிருப்பில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகம் மூலம் சம்பளம், சலுகைகள், பள்ளிகளுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசு ஜன., 3 ல் பொங்கல் போனஸ் அறிவித்தது. அதில் தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ. 1000, இடைநிலை, உடற்கல்வி, கைத்தொழில் ஆசிரியர்கள் ஆகியோருக்கு ரூ.3000 வீதம் போனஸ் வழங்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டிருந்தது.
இதைதொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள ஆசிரியர்களுக்கும் பொங்கலுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே போனஸ் வழங்கப்பட்டது. வத்திராயிருப்பு பகுதி ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. பொங்கல் முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகும் வழங்கப்படவில்லை.
ஆசிரியர்கள் கூறுகையில்,"" தமிழக அரசு இதை போனசாக வழங்கவில்லை. கடைநிலை ஊழியர்கள் அதிகம் உள்ளதால் அவர்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக "பொங்கல் கருணை தொகை' என்ற பெயரில் வழங்குகிறது. இதை பொங்கலுக்கு முன் வழங்கவேண்டும் என்பதுதான் அரசுவிதி. அதனால்தான் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பல அவசரப் பணிகள் இருந்தாலும் அதை ஒத்திவைத்து இப்பணிகளை உடனடியாக முடிக்கின்றனர்.
ஆனால் வத்திராயிருப்பு உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் மிகவும் தாமதமாக கரூவூலகத்திற்கு பட்டியல் அனுப்பியதால்தான் இப்பகுதி ஆசிரியர்களுக்கு இன்னும் போனஸ் வரவில்லை. அலுவலகத்தின் அலட்சிய போக்கே இதற்கு காரணம்,' என்றனர்.
தொடக்க கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், " பட்டியல் உரிய காலத்திற்குள் அனுப்பிவிட்டோம். கரூவூலகத்தில் என்ன காரணத்தினால் தாமதமானது என தெரியவில்லை. தொடர் விடுமுறை காரணமாக தாமதமாகியிருக்கலாம்,' என்றனர்.