பியூசி விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஊக்க தொகை உயர்வு?

மாநிலத்தில் இரண்டாமாண்டு பியூசி விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு ஊக்க தொகை உயர்த்தி வழங்க மாநில கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் இரண்டாமாண்டு பியூசி விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள்
தங்களுக்கு வழங்கப்படும் ஊக்க தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஆண்டுதோறும் பிரச்னை எழுப்பிவருகிறார்கள். சில சமயத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், விடைத்தாள் திருத்தும் பணி தாமதமாகிய சம்பவமும் நடந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் விடைத்தாள் திருத்தாமல் போராட்டம் நடத்தியபோது, 2016ல் கண்டிப்பாக ஊக்கதொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
அதை செயல்படுத்தும் வகையில் மாநில கல்வி இயக்குனரகத்தின் சார்பில் மாநில அரசுக்கு சிபாரிசு பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்தாண்டு வழங்கியதை விட 40 சதவீதம் கூடுதலாக ஊக்க தொகை உள்பட சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான இரண்டாமாண்டு பியூசி தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடக்கிறது. தேர்வுக்கான ஆயத்த பணிகள் இப்போதே தொடங்கியுள்ளது. விடைத்தாள் தயாரிப்பு, அச்சடித்தல், எழுது பொருட்கள் கொள்முதல்,, பாயும் படை அமைப்பு, உதவியாளர்கள் நியமனம் உள்பட 23 பணிகள் தேர்வுக்காக அமைக்கப்படுகிறது. அதை தேர்வு செய்யும் பணியில் மாநில முதல் நிலை கல்லூரி இயக்குனரக இயக்குனர் டி.எஸ்.பிரகாஷ் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஊக்க தொகை விவரம்

முதன்மை கண்காணிப்பாளர்,ரூ.560,லிருந்து ரூ.784,ஆக உயர்த்தப் பட்டுள்ளது. துணை கண்காணி-்ப்பாளருக்கு ரூ.525,லிருந்து ரூ.735 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒரு விடைத்தாள் திருத்த ரூ. 21 லிருந்து ரூ. 29போக்குவரத்துபடியுடன் வழங்கப்படுகிறது. போக்கு வரத்து படி பெங்களூருக்கு ரூ.170ம், பிற பகுதியில்,ரூ.147ம் வழங்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...