ஜல்லிக்கட்டை கனஜோராய் நடத்தியிருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தினர்!

உச்சநீதிமன்ற தடையை மீறி அமைச்சரின் சொந்த ஊரில் ஜல்லிக்கட்டை கனஜோராய் நடத்தியிருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தினர்.

(கோப்பு படம்)
புதுக்கோட்டை மாவட்டம், இழுப்பூர் அருகே உள்ளது ராபூசல் கிராமம். இது அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊர் ஆகும். இங்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான மைதானம் ரெடிமேடாக இருக்கிறது.
இந்நிலையில், இழுப்பூர் பகுதி முழுவதும் கடந்த ஒரு மாதமாகவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒத்திகை நடத்தியிருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு அதை கண்காணிக்கச் சென்ற காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை மாடு முட்டியதில் அவர் காயம்பட, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியிருக்கிறார்கள்.
இது அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதி என்பதால் காவல்துறையே இந்த தகவலை வெளியில் கசிய விடாமல் பார்த்துக் கொண்டார்கள்.இந்நிலையில், இன்று காலை 10 ஜல்லிக்கட்டு மாடுகளை, அமைச்சரின் சொந்த ஊரான ராபூசலில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கொண்டு சென்று, ஜல்லிக்கட்டை நடத்தியிருக்கிறார்கள். இந்த தகவல் காவல்துறைக்கு தெரிந்து, உடனடியாக அவர்கள் அங்கு சென்று, ஜல்லிக்கட்டு நடத்துவதை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.தற்போது, மாடுகளை வைத்து சாமி கும்பிடத்தான் சென்றார்கள் என காவல்துறையையே சொல்ல வைத்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இதேபோல், காரைக்குடியை அடுத்த திருக்கோவிலூரிலும் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.-வீ.மாணிக்கவாசகம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...