SSTA

 போராட்டம் இல்லாமல் 
யாராட்டமும் செல்லாது -நாம்
போராட்டம் செய்யவில்லை
போர் முகத்தை காட்டவில்லை-நம்மை

புறம் தள்ளி விட்டவர்க்கு
புரிய வைக்க புறப்பட்டோம்.
புரிந்தது!புரிந்தது! இனி அரசுக்கு புரிந்தது.
ஆதங்கப்பட்ட ஆசானின் அவலநிலை அத்தனையும் இத்தனை நாள் பொறுத்த நாம் இனியுமே பொறுத்திருந்தால் எத்துனையும் இல்லாமல் ஏமாந்து நின்றிருப்போம்!

ஏனிந்த அவலநிலை என்றெண்னி பார்த்தாலோ வில்லங்க விளையாட்டால் -நாம்
வீதியிலே நிற்கின்றோம்!
(தரமில்லை-தகுதியில்லை என்றெண்னி விட்டவரே! 
தகுதித்தேர்வில் தேர்ந்தெடுத்தும் நாம் தரமற்ற ஆசானா?

இதுவரை சந்தித்த துன்பமெல்லாம் போதும்! போதும்!! இனி சாதித்து காட்டிடுவோம் சரித்திரத்தை மாற்றிடுவோம்!

கி.மு- கி.பி போல்  இரண்டாயித்து ஒன்பதில் முன்னும் பின்னும் என்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்!

வெற்றியின் விளிம்பிலே நிற்கும் நாம்- நம்மை விதைத்திட்ட வித்தகரை விண்ணுயர வாழ்த்தியே விடியும் வரை காத்திருப்போம் நம் விடியலைத் தேடியே!...

மு.எழில்மாறன்
SSTA
வேலுர் மாவட்ட செயலர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...