உயர் கல்விக்கு அஸ்திவாரம், இன்று! துவங்குகிறது பிளஸ் 2 தேர்வு !

உயர்கல்விக்கு என்ன படிப்பை தேர்வு செய்வது என்பதை, முடிவு செய்யும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. உடுமலையில், 3963 மாணவர்கள் இன்று இத்தேர்வை சந்திக்கின்றனர்.
வினாத்தாள்களை நோடல் மையங்களிலிருந்து, தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லவும், விடைத்தாள்களை, மையங்களில் பெற்று, முதன்மை கல்வி
அலுவலகத்துக்கு கொண்டு செல்லவும், மூன்று வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மையத்துக்கு நான்கு நிலையான பறக்கும் படைகள், துறை அலுவலர் ஒருவர், முதன்மை கண்காணிப்பாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும் முறையிலும், தேர்வுகளை கண்காணிக்கும் முறையிலும் பல்வேறு புதிய நடைமுறைகள் நடப்பாண்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

இப்புதிய நடைமுறைகள் மற்றும் குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, தேர்வறை வழிகாட்டி பலகைகள், போலீஸ் பாதுகாப்பு, உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வு பொறுப்பு அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு திருப்தி அடைந்தனர். இன்று மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு காலை, 10:15 மணிக்கு துவங்குகிறது. 1:15 மணி வரை தேர்வு நடக்கிறது. தேர்வு முடிந்த பின், ஆப்சென்ட் ஆன மாணவர்களின் எண்ணிக்கை, உடனடியாக ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

உடுமலை புங்கமுத்துார் காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி அரசு
மேல்நிலைப்பள்ளி, விசாலாட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி, உடுமலை ஆர்.ஜி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் மேல்நிலைப்பள்ளி, கணியூர் வெங்கடகிருஷ்ணா பள்ளி, குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.ஆர்., மற்றும் ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ், பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட, 15 மையங்களில், 3963 மாணவர்களும், ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில், 364 தனித்தேர்வர்களும், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...