408 ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் சேவை அமைச்சர் சுரேஷ்பிரபு தகவல்!

ரயிலில் செல்லும்போது சாப்பாட்டுக்கு முன்கூட்டியே ஆர்டர் கொடுக்கும் வகையிலான இ-கேட்டரிங் சேவை 408 ரயில் நிலையங்களில்  செயல்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த பெண்கள் உணவு தயாரிக்கும் பணியில்  ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறினார். ரயில் பயணத்தின்போது நல்ல உணவு கிடைக்காமல் பயணிகள் சிரமப்படும் நிலையுள்ளது. சுவையான, தரமான,  உடலுக்கு கெடுதல் இல்லாத உணவு வழங்க நடவடிக்கை எடுக்க

வேண்டுமென பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பயணிகளின்  கோரிக்கையை ஏற்று இ-கேட்டரிங் சேவையை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயணிகள் எளிதாகவும், விரும்பிய உணவு வகைகளை பெறமுடியும். பயணிகள் தங்களுக்கு தேவையான உணவுகளை  முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ளலாம். இதற்கான மொபைல் அப்ளிகேஷன், எஸ்எம்எஸ் மூலமாகவும் உணவு வகைகளை ஆர்டர் செய்யலாம்.  இத்திட்டம் செயல்படுத்தப்படும் ரயில் நிலையம் வந்தவுடன் ஆர்டர் கொடுத்தவர்களுக்கு உணவு வழங்கப்படும். உணவை பெற்றுக் கொண்டபின் பணம்  வழங்கலாம்.

குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் இ-கேட்டரிங் சேவை இருந்துவந்த நிலையில், 408 முக்கிய ரயில் நிலையங்களுக்கு இத்திட்டம்  விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் இந்த உணவு தரமாகவும், வீட்டு  சாப்பாட்டை போன்று வழங்கப்படுகிறது என கூறினார். சில முன்னணி இந்நிறுவனங்கள் ஏற்கனவே இத்திட்டத்தில் இணைந்து இ-கேட்டரிங்  சேவையை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...