திருச்செங்கோடு அருகே, பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், காயமடைந்த மாணவர் இறந்தார். அவரது சடலத்தை வாங்க மறுத்து, மருத்துவமனையை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா கோழிக்கால்நத்தத்தை அடுத்த, கொல்லம்பாளையம் பழனிசாமி மகன் சூர்யா. இவர், கோழிக்கால்நத்தம் அரசு பள்ளியில், 4ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த வாரம் பள்ளியில், இவரது ஜியாமென்ட்ரி பாக்சை எடுத்தது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இவருடன், இரண்டு மாணவர்கள் தகராறு செய்தனர். இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில், தலையில் பலத்த காயமடைந்த சூர்யா, மேல் சிகிச்சைக்காக, கடந்த, 4ம் தேதி, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு இறந்தார். அதிர்ச்சியடைந்த சூர்யாவின் பெற்றோர், நேற்று, சேலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.அவர்கள், 'மாணவர் சாவுக்கு, காரணமான சக மாணவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்' என, வலியுறுத்தினர். அவர்களிடம், திருச்செங்கோடு, போலீசார் பேச்சு நடத்தியும், சடலத்தை வாங்க மறுத்துவிட்டனர்.