'பொதுமக்களின், 'ஆதார்' தகவல்களை எந்த காரணம் கொண்டும், எந்த மாநில அரசுக்கும், தனியாருக்கும் வழங்கப்படாது' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாட்டில், 5 வயதுக்கு மேற்பட்டோரில், 80 சதவீதம் பேருக்கு ஆதார் எண் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொருவரின் கண் கருவிழி, உள்ளங்கை மற்றும் விரல் ரேகைகளை பதிவு செய்து, அதன் அடிப்படையில், பிரத்யேக அடையாள எண் தரப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்:இந்த திட்டத்தை பயன்படுத்தி, தமிழகத்தில், 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' தர திட்டமிடப்பட்டது. இதே போல், பல மாநிலங்கள், ஆதார் தகவல்களை பயன்படுத்தி திட்டங்கள் தயாரித்துள்ளன. ஆனால், 'தனி நபரின் ஆதார் தகவல்களை யாருக்கும் பகிர்ந்து தரக்கூடாது: அவ்வாறு தந்தால், அது மனித உரிமை மீறல்' என, சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆதார் தகவல்களை எதற்கெல்லாம் பெறலாம் என, மத்திய பல்கலைகள் சார்பில், பல்கலை மானியக்குழு அறிவுறுத்தல் கேட்டது. இதன்படி, ஆதார் தகவல்களை எதற்கு பயன்படுத்த வேண்டும், என மத்திய மனித வள அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன் விவரம்:
ஆதார் தகவல் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, மத்திய அட்டர்னி ஜெனரல், சில விளக்கங்கள் அளித்துள்ளார். அதன்படியே, ஆதார் தகவல்களை
பயன்படுத்த முடியும்.
'டேட்டா பேஸ்'
* ஆதார் எண் மற்றும் அட்டையை, பொதுமக்கள் தானாக முன்வந்து தங்கள் அடையாள அட்டையாக, முகவரி ஆவணமாக பயன்படுத்தினால், அதை அரசு நிறுவனங்கள், பல்கலைகள் ஏற்று கொள்ளலாம்
*ஆதார் எண் மூலம், பிரதமரின் ஜன் தன் திட்டத்தில் வங்கி கணக்கு துவங்கி, அதன் மூலம் அரசு கல்வி உதவித் தொகை உட்பட மற்ற நலத்திட்டங்கள் மற்றும் உதவித் தொகை வழங்கலாம்
* ஆதார் எண்ணை தவிர, ஆதாரில் பதிவு செய்துள்ள தனி நபரின் கருவிழி, கைரேகை விவரங்கள் அடங்கிய தகவல்களை எந்த ஒரு அரசு நிறுவனமும், மாநில அரசு துறைகளும், தனியார் நிறுவனமும் பெற முடியாது; அவற்றை வழங்கவும் கூடாது
* ஆதார் எண் தகவல் தொகுப்பான, 'டேட்டா பேஸ்' விவரங்களை மட்டும், இணையதளத்தில் பயன்படுத்துவதற்கு கூட, எந்த அரசு நிறுவனத்துக்கும் அளிக்க முடியாது. இது தடை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.