தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டதற்கு தனியாரிடம் இருந்து, அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது தான் காரணம்,'' என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய, முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி தெரிவித்துள்ளார்.@Image1@
இது குறித்து, அவரது பேட்டி:தமிழ்நாடு மின் வாரியம், சொந்த மின் நிலையங்கள்; மத்திய மின் நிலையங்கள்; தனியார் மின்
நிலையங்களில் இருந்து, குறுகிய கால மற்றும் நீண்ட கால மின் கொள்முதல் மூலம், மின் தேவையை பூர்த்தி செய்கிறது.மின் வாரியம், மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு முடிவு செய்த உடன், 'டெண்டர்' விடவும், விலை நிர்ணயம் செய்யவும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். மின் சட்டம், 62வது பிரிவின் கீழ் ஆணையம்,
மின்சாரம் வாங்க அனுமதி வழங்கும். ஆனால், தமிழ்நாடு மின் வாரியம், ஆணையத்தின் அனுமதி பெறாமல், 2011 முதல், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து வருகிறது.குறிப்பாக, 2012ல், தனியார் நிறுவனங்களிடம், குறுகிய காலத்திற்கு, 1,200 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய, மின்வாரியம் முடிவு செய்தது. அப்போது, மின்வாரியம், மத்திய மின் நிலையங்களில், ஒரு யூனிட் மின் உற்பத்தி செலவு, மூன்று ரூபாய்க்கு கீழ் இருந்தது.
மின் வாரிய டெண்டரில் பங்கேற்ற தமிழக நிறுவனங்கள், ஒரு யூனிட், 5.15 ரூபாய்க்கு வழங்க விலைப்புள்ளி வழங்கின. இந்த விலை அதிகம் என கருதிய மின்வாரியம், அந்த டெண்டரை ரத்து செய்து, மறு டெண்டர் கோரியது. அதில்,பழைய விலையை விட, ஒரு யூனிட், 5.50 ரூபாய் என்ற அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கியது. இவ்வாறு, குறுகிய கால ஒப்பந்தத்தில் மட்டும், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால், வாரியத்திற்கு, 5,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள காயன்குளத்தில், என்.டி.பி.சி., நிறுவனத்திற்கு, எரிவாயு மின் நிலையம் உள்ளது. தமிழ்நாடு மின்வாரியம், ஆணையத்தின் அனுமதி இல்லாமல், ௨௦௧௪ லோக்சபா தேர்தலுக்காக, அந்த மின் நிலையத்தில் இருந்து, ஓராண்டிற்கு, மிக அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது. இதனால், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது.
தற்போது, மின்வாரியம், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதற்கு, தனியாரிடம் இருந்து, அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது தான் காரணம்.மின் சட்டத்தின் கீழ், மின் வாரியம், தன் அனைத்து விவரங்களையும், பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதற்காக, மின் வாரியம், தன் மொத்த வருவாய்தேவை அறிக்கை, கட்டண நிர்ணய மனு ஆகியற்றை ஆண்டுதோறும், நவ., மாதத்திற்குள், ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையில், வாரியத்தின் வருவாய், செலவு, மின் கொள்முதல் உள்ளிட்ட அனைத்து விவரங்களும்

Advertisement
இடம்பெற்று இருக்கும். நவம்பர் மாதத்திற்குள், அறிக்கை தரவில்லை என்றால், 'டிசம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, ஆணையம், மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தரவில்லை எனில், மின் வாரிய அதிகாரிகளை, ஆணைய அலுவலகத்தில் உள்ள நீதிமன்ற அறைக்கு அழைத்து, விசாரணை நடத்தலாம். இந்த அறிக்கையை சமர்ப்பித்தால், முறைகேடுகள் தெரியவரும் என்பதால், தமிழ்நாடு மின் வாரியம், வருவாய், தேவை அறிக்கையை சமர்ப்பிப்பது கிடையாது.
மின் வாரியம், மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யும்போது, குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், டெண்டர் கோருகிறது. அந்த நிறுவனங்களிடம் இருந்து, சந்தை விலையை விட, அதிக விலை கொடுத்து, தரமற்ற உபகரணங்களை வாங்கி வருகிறது.இதனால், மின் வாரியத்திற்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், மின் சாதனங்களிலும், அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நாகல்சாமி,
ஆணைய முன்னாள் உறுப்பினர்