எத்தனை இடங்கள் நிரம்பின?விவரம் கேட்கிறார் ராமதாஸ்

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நேற்று வெளியிட்ட அறிக்கை:கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, எந்தெந்த மாநிலங்களில், எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டன என்பது குறித்த விவரங்களை, குஜராத் மாநிலம், ஆமதாபாத், இந்திய மேலாண்மையியல் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.கடந்த, 2014 - -15ம் ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கை விவரங்களை இந்த மையம்
வெளியிட்டுள்ளது. டில்லி, 44.61 சதவீதம்; ராஜஸ்தான், 39.26; தமிழகம், 37.75 சதவீதம் இடங்களை நிரப்பியுள்ளதாக, அந்த அமைப்பு கூறியுள்ளது.

தமிழகத்தில், 89 ஆயிரத்து, 941 மாணவர்கள், கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்த்துள்ளதாகவும், இது, மொத்த இடங்களில், 94 சதவீதம் என்றும் பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியுள்ளார். இந்த புள்ளிவிவரங்கள், முரண்பட்டவையாக உள்ளன. ஒரு புள்ளிவிவரத்தில், 94 சதவீதம் என்றும், இன்னொன்றில், 64 சதவீதம் என்றும், மூன்றாவது ஆதாரத்தில், 37 சதவீதம் என்றும் கூறப்படுகிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரமோ, இவற்றையெல்லாம் விட மிகக்குறைவான இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பதாக கூறுகிறது.மொத்தத்தில், ஏழைகளுக்கு தரமான கல்வி வழங்க கொண்டு வரப்பட்ட சட்டம், தமிழகத்தில், மோசடியால் வீணடிக்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...