திறமை இருந்தால் வாய்ப்புகள் தேடி வரும்:முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் பேச்சு !

நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளை கடந்தும் இன்னும் வறுமை, அனைவருக்கும் கல்வி கிடைக்காத நிலைமை உள்ளது. பல துறைகள் பின்தங்கியுள்ளன.
இதுபோன்ற சமூக பிரச்னைகளுக்கு கல்விதான் தீர்வாக இருக்கும். அதற்காக கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும். கல்லுாரிப் படிப்பை முடித்து செல்லும் மாணவர்கள், நியாயமான
கொள்கைகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் ஒரே துறையை தேர்வு செய்யாமல், விரும்பிய துறையை தேர்வு செய்து சாதிக்க வேண்டும்.அனைத்து துறைகளிலும்
வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதற்கான திறமையை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புகள் நம்மை தேடி வரும். தொழில்நுட்பம், விஞ்ஞானம், உலக அளவிலான சந்தைப்படுத்தும் நுட்பம் நம் நாட்டில் சிறப்பாக உள்ளது. ஆனால் ஏழ்மை, ஜாதி பிரச்னை, பதட்டமான சூழ்நிலை போன்றவையும் உள்ளன.உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை
அதிக அளவில் இருந்தாலும், அடிப்படை கட்டமைப்புக்களை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும். கல்வித்துறை நிர்வாகம் மேம்பட வேண்டும்.

வளர்ச்சிக்கு உதவாத தற்போதைய சூழ்நிலையை மாணவர்கள் இப்போதே கட்டுப்படுத்தினால், எதிர்காலத்தை கட்டுப்படுத்தி வளமானதாக ஆக்க முடியும். அதற்கான முயற்சிகளை
இப்போதே துவக்குங்கள், என்றார்.

கல்லுாரித் தலைவர் முனைவர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது: வேலைவாய்ப்பை உருவாக்கும் படிப்புகளை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். பட்டப்படிப்பு முடிக்கும் 50 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதற்கு வழக்கமான சம்பிரதாய படிப்புகளை அவர்கள் தேர்வு செய்தது தான் காரணம். வேலையில்லாதவர், சமுதாயத்திற்கு ஒரு சுமை. பல்வேறு சமூகச்சீர்கேடுகளில் அவர்கள் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
போட்டிகள் அதிகம் உள்ள இச்சூழலில், வேலைக்கு தேவையான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும், 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...