கட்சி நிர்வாகிகளை சந்திக்கக்கூடாது:மண்டல அலுவலர்களுக்கு உத்தரவு !

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்கள் எந்த கட்சி நிர்வாகிகளையும் சந்திக்கக்கூடாது, என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.சட்டசபை தேர்தலுக்கென மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும்
அதிகாரி யின் கட்டுப்பாட்டில் இருப்பர். சோதனையில் ஈடுபடும் பறக்கும் படையினர் மற்றும் வீடியோ கிராபர்கள் மாவட்ட கலெக்டரின் கட்டுப்பாட்டில் இருப்பர். தற்போது மண்டல அலுவலர்கள், உதவி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புக்கள் முடிந்துள்ளது.

இந்நிலையில் மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ள உத்தரவில், தேர்தல் பணிக்கென நீங்கள் நியமிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் கமிஷனின்
கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளீர்கள். எனவே எந்த கட்சியையும் சார்ந்திருக்க கூடாது. கட்சி பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்கக் கூடாது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். உங்களது அலைபேசியை எந்த நேரத்திலும் சுவிட்ச் ஆப் செய்யக் கூடாது. 24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும், எனக்கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...