சென்னை பல்கலை, சட்டப் பல்கலை, அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகள், மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்கள் இணைந்து, அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற அமைப்பை துவக்கியுள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில், 12 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். அமைப்புக்கு, சென்னை பல்கலை பேராசிரியர் ராமு மணிவண்ணன் ஆலோசகராக உள்ளார்.
இதுகுறித்து, மாணவர் சங்க நிர்வாகிகள் மகேந்திரன், ஹரிராம், கார்முகில், கார்த்திக் சுப்ரமணியம், சுனில்குமார், சிராஜூதீன் மற்றும் காயத்ரி ஆகியோர் கூறியதாவது:கட்சிகளை சார்ந்திருந்து, இத்தனை நாள் ஓட்டளித்ததால், நாட்டின் முன்னேற்றம் பின்னோக்கி சென்று விட்டது. ஜாதி, மத, இன மற்றும் பொருளாதார ரீதியாக, மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். இந்த நிலைமையை மாற்ற, மாணவர் சங்கத்தினர் இணைந்து, 12 தொகுதிகளில் நிற்க முடிவு செய்துள்ளோம். தேர்தல் அறிக்கையும் தயாரித்துள்ளோம். நீர்வளம் மற்றும் பாசனத் துறைக்கு தனி அமைச்சகம், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம், குழந்தைகள் நல பிரச்னைக்கு தனி காவல் நிலையம் என பல சிறப்பம்சங்கள், எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.