ஓட்டுப்பதிவு தினத்தன்று, அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், சம்பளத்துடன் விடுப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:சட்டசபைக்கு, மே, 16ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம், அனைத்து நிறுவனங்களும், சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும். தவறும் நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இம்முறை, 100 சதவீதம் ஓட்டுப்பதிவை எட்ட, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட, அனைத்து நிறுவன ஊழியர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும், தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.